பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

141

பாரத மாதா நம் தாய். அவள் நம் தாய்நாடு. நாமெல்லோரும் அவர்களுடைய பிள்ளைகளும் பெண்களுமே. நீங்கள் 'பாரத மாதாவுக்கு ஜே என்று கூறி வாழ்த்தும் போது, உங்களை வாழ்த்திக் கொள்கிறீர்கள்” என்றார்.

இவர் தந்த விளக்கம் அந்த எழுத்தறிவில்லாத விவசாயிகளின் மனத்தில் ஆழப் பதிந்தது.

1937ல் அகில இந்திய காங்கிரஸ் அங்கத்தினர்களும், சட்டசபையில் இருந்த காங்கிரஸ்காரர்களும் ஒரு மகாநாடு கூடினர். அமோக வெற்றி பெற்ற இந்த கட்சியின் அங்கத்தினர், மந்திரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டால் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை பற்றி விரிவாக எடுததுக் கூறி ஒரு திட்டமும் வகுத்துக் கொடுத்தார் ஜவஹர்.

ஐம்பத்தி மூன்றாம் அத்தியாயம்

முப்புக்கள், ஒன்ரு, இரண்டா? ஒனரு

முகம்மது அலி ஜின்னா பாரதத்தில் முஸ்லீம்களின் உரிமைக்குரல் ஆனார். எப்படியும் முஸ்லிம்கள் இந்தியாவில் சிறுபான்மையோர், எனவே அவர்கள் தனியே தான் இயங்கவேண்டும் என்று கூறினார். இதற்காக முஸ்லீம் லீக்” என்ற கட்சியைத் தோற்றுவித்து, அதன் தலைவரும் ஆனார்.

காங்கிரஸ் கட்சிக்கு இது எதிர் க ட் சி யா கி ய து. நேருவின் கொள்கைகளை காங்கிரஸ் கமிட்டி ஏற்க மறுத்த போது, அதை தமக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டார் ஜின்னா.

இதே 1938 ஆண்டு உலகம் முழுவதும் போர் அச்சம் குடி கொண்டது. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் தகராறு.