பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

54

இந்த இரு முகாம்களின் எதிரொலி ஜவஹரின் வீட்டிலும் ஒலிக்கத் தொடங்கியது. பெரிய நேருவுக்கும் இளைய நேருவுக்கும் இடையே உறவு அவ்வளவு சுமூகமாக இல்லை. பேச்சு வார்த்தைகள் காரசாரமாகவே இருந்தன. தினம் தினம் சூடேறிக் கொண்டே வத்தது.

1928ஆம் வருடத்தில் காங்கிரஸ் கல்கத்தாவில் நடைபெற இருந்தது. காங்கிரஸ் மகாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பெரிய நேரு.

‘ எனது திட்டத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நான் மகாநாட்டுக்குத் தலைமை வகிக்கப் போவதில்லை ' என்று கூறிவிட்டார் பெரிய நேரு, இந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பது? அப்பாவா? பிள்ளையா?

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம், கல்கத்தாவிலே நடைபெற்றது. பெரிய நேருவும் இளைய நேருவும் வியூகம் வகுத்து நின்றனர். டிசம்பர் மாதம் 27ம் தேதி, ஒரு தீர்மானம் கொண்டு வந்தார் மகாத்மா காந்தி. என்ன தீர்மானம்?

பிரிட்டிஷ் அரசாங்கம் மோதிலால் நேருவின் திட்டத்தை ஏற்றுக்கொண்டு 1930ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்க வேண்டும். இல்லா விட்டால் காங்கிரஸ் பெரியதொரு சட்டமறுப்புப் போர் தொடங்கும்.

இதுதான் காந்தியடிகள் கொண்டு வந்த தீர்மானம். இதற்கு ஒரு திருத்தம் கொண்டு வந்தார் ஜவஹர்.

' ஒரே வருடத்தில் - அதாவது 1929க்குள் பூரண சுதந்திரம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட மறுப்புப் போர்!’