பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

60

ஐந்து கமிட்டிகள் ல்ைலபாய் பட்டேலை தேர்ந்தெடுத்தார்கள். மூன்று கமிட்டிகள் ஜவஹரை தேர்ந்தெடுத்தன.

மகாத்மா என்ன செய்தார், தலைமை தாங்க மறுத்தார். பலரும் வற்புறுத்த, வற்புறுத்த, அவர் தம் பிடிவாதமான மறுப்பு அதிகரித்தது.

போட்டியின்று விலகுமாறு பட்டேலை கூறினார் காந்தியண்ணல், பட்டேலும் இசைந்தார்.

  • காங்கிரஸ் தலைவர் ஜவஹரே !’ என்றார் மகாத்மன.

ரன் என்ற காரணமும் கூறினார்.

" வருங்ாலப் போராட்டத்தை நடத்த வேண்டியவர் இந்நாட்டு இளைஞரே. ஆதலின் இளைஞர் . ஒருவர் காங்கிரஸ் தலைவராயிருததலே மிகப் பொருத்தம். தலைமை பீடததில் நான் இருப்பதும் ஜவஹர் இருப்பதும் ஒன்றே. இதுவரை முதியோர் தயங்கி வந்த பொறுப்பை இனி இளையவர் ஏற்பது முறையே. ஜவஹரின் தீரத்துக்கு இணை யேது ? தேசாபிமானத்தில் ஜவஹரை விட சிறந்தவர் எவர்? அவர் சிறிது அவசரக்காரர். அவ்வளவுதான். ஆனால் அவசரப்பட்டுக் காரியத்தை கெடுப்பவர் அல்லர். எனவே அவர் தலைமையில் தேசம் பத்திரமாகவே இருக்கும்.' என்று விளக்கினார்.

ஜவஹர் ராஷ்டிரபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது நாற்பது.