பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蛇

லா. ச. ராமாமிருதம் : 47

பிள்ளையார்களுக்குச் சிரத்தை காட்ட முடியா விட்டாலும் வைத்தி முருகபக்தன். உதவிக்குப் பண்டாரம் கிடையாது. கோயில் வாசல் கிணற்றில் தண்ணிர் சேந்தி கர்ப்பக்ரஹத்தில் கங்காளத்தில் நிரப்பி ஆகவேண்டும். கர்ப்பக்ரஹத்தை அலம்பி விட வேண்டும். ஊரார் விதித்தது ஒரு வேளை பூஜை ஆயினும், அவனுடைய சிரத்தை காரணமாக இரண்டாவது வேளையை (மாலையில்) வைத்தி தானாகவே ஏற்படுத்திக் கொண்டான். தண்ணீர் மொள்ளுவதே ஒரு கசரத் வைத்திக்கு மார்பும் தோள்களும் அகண்டு மார்பு புடைத்து எழும். அவன் பக்கத்தில் விசாலம் மரப்பாச்சி. அவர்களுடைய தாம்பத்ய உறவு எனக்கு எப்பவுமே சரியாக விளங்கினதில்லை. ஆர்வம் யாருக்கு யார்மேல் அதிகம். ம்ஹாம். இது உன்னுடைய வேலை இல்லை என்று நீதியின் அதட்டல் உள்ளே கேட்கிறது. ஊராரின் இத்தனை கருமித்தனத்திலும் சில விசேஷப் பண்டிகைகள் கொண்டாடுவதுண்டு. கார்த்திகை, பொங்கல், சூரசம்ஹாரம், சிலபேரின் ப்ரத்யேக வேண்டுதல், கோர்ட்டில் கேஸ் ஜெயித்து விட்டால் மண்டகப்படிக்கு அநேகமாய் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தஸ்தாவேஜ் இருந்து கொண்டே யிருக்கும். துணியில் சுற்றி கக்கத்தில் இடுக்கிக் கொண்டு கோர்ட்டுக்குப் போவார்கள். கோர்ட்டுக்குப் போவதே அவர்களுக்குக் கெளரவம். இந்த விசேஷ தினங்களில் வைத்தியின் உதவிக்கு விசாலம் கோயிலுக்கு வருவாள். நைய்வேத்தியத்திற்கு மூன்று ரூபாய் கொடுத்து விட்டு மண்டகப்படிக்காரன் “நெய் ஊத்தவே இல்லை. முந்திரி போட்டீங்களா? வெல்லத்தைக் காணோம்' அவன் கேட்டது கிட்டத்தட்ட சண்டைமாதிரி இருக்கும். அதற்கும் விசாலம் தான் தைரியமாக பதில் சொல்வாள். “நீ கொடுத்த பணத்திற்கு பெரிய கோவில் பூஜை என்று கேட்கிறாயா?” குற்றம் சொன்னவன் பின்னடைவான். வைத்திக்கு அந்தத்