பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

லா. ச. ராமாமிருதம் : 49

நிமித்தமாக வைத்தி தினமே கிட்டத்தட்ட பன்னிரண்டு மைல் சுற்றவேண்டியிருந்தது.

பணத்தை விசாலத்திடம் கொடுத்துவிடுவான். புடவை வேட்டி போன்ற விசேஷ செலவுக்கு ஆச்சு. விசாலம் அந்த சின்ன வயதிலிருந்தே கஜானாக்காரி. விசாலம் நல்ல நிர்வாகஸ்தி. அவள் பேரம் பேசுகையில் சரக்குக்காரனிடம் குழையமாட்டாள். குரலில் சற்று அதட்டல் இருக்கும். ஆமா. இவங்களிடம் தலையைக் குடுத்தால் குடுமியைப் பேட்டுக்கன்னி ஆக்கிடுவாங்க.

ஆனால் நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. வைத்தி அப்பாவிடமிருந்து கோயில் பூஜையை ஏற்றுக் கொண்டாற் போல் விசாலம் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுவிட்டாள்.

பெரியகோயில் ப்ரும்மோற்சவம் கியாதி பெற்றது. பங்குனி மாதம் நடக்கும். நான் குறிப்பிடும் இந்த உற்சவம் ரொம்ப விசேஷம். ஐந்தாம் நாளில் புது ராவணவாஹனம் பூரா வெள்ளித்தகடு.

உற்சவம் பார்க்க காஞ்சீபுரத்திற்கு நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன். பட்டனத்தில் வேலைக்கு அலைந்து மனமும் உடலும் சலிச்சுப் போச்சு. என் பொழுதே இப்படித்தான் போய்விடுமா? ஒரொரு சமயம் மனத்தில் வண்டல் இறங்குகையில் அந்த நிலையை வெறுமென சொல்லுவதால் நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. அனுபவித்தால்தான் தெரியும். அப்படித் தெரிஞ்சால் மட்டும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? வேலை போட்டுக் கொடுக்கப் போகிறீர்களா?

ஒரு மாட்டுவண்டி என் திக்கில் என்னைக் கடந்து சென்று நின்றது.