பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 <> செளந்தர்ய.

நான் எழுத்தில் முனைந்ததும் எண்ணங்கள் மேலும் மேலும் விசாலமாகி எழுத்து ஓரளவு சிந்தனை நிலையை அடைந்துவிட்டது. எங்கிருந்து வந்தோம் எங்கு போகிறோம் என்பது தெரியாவிடினும் இங்கு ஏன் வந்தோம் என்ற கேள்விக்கு பதிலாய் ஆயிரம் இதழ்களாய் விரிந்தது. ஆண்டவன் இருக்கிறாரா என்பது எப்பவுமே உள்ள குழப்பம். அந்தக் குழப்பத்திலிருந்து அழகான தோற்றங்கள் தோன்றித் தொடர்ந்தன. எங்கு எங்கு எப்படிப் பார்க்கிறேன் என்றே தெரியவில்லை. அதுவே ஒரு தனி இன்ப

மாயிற்று.

ஹைமாவதி காலை, மதியம், மாலை, இரவு என்று தனித் தனி வேளைகளில் தனித்தனியாக மாறுவதாகவே எனக்குப் பிரமை ஏற்படுகிறது. காலையில் எழுந்து படுக்கையைச் சுருட்டும்போதுகூட அவள் கூந்தல் அதிகம் பிரிகள் கலைவதில்லை. நேரம் முற்ற முற்ற கடுகடுப்பாகி விடுவாள். சாயங்காலம் தலை சீவி முடிந்து புடவை மாற்றினதும் தனிப் பொலிவு அடைந்துவிடுவாள். முகம், குரல் இவைகளில் லேசான கருணைகூட தெரியும். அதுவே அவளை இளமைப் படுத்துகிறது. இந்த ரஸாயனம் எப்படி நேருகிறது? தனி சுறுசுறுப்பு. அந்தஸ்த்து. இது அவள் இரவு படுக்கும் வரை நீடிக்கும்.

எப்போதேனும் நான் ஐயன்பேட்டை போகையில் விசாலம் வயதேறிக் கொண்டு இருக்கிறதேயொழிய அவள் தோற்றத்தில், சிவப்பில் மாற்றம் எனக்குத் தெரியவில்லை. அவள் தாடைப்பக்கம் சற்றுச் சுருக்கம் தெரிகிறது. அவ்வளவுதான். வைத்தி காத்திரமாயிருக்கிறான். பரம்பரைச் செவிடு அவனுக்கு விருத்தியாகிக் கொண்டிருக்கிறது. அதிகமாய் பேசாமல் தொண்டையும் கம்மிவிட்டது. லேசான கவலை வந்திருக்கிறது. சஷ்டிஅப்தபூர்த்தி நடக்கவேண்டும்.