பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

செளந்தர கோகிலம்



பெரிய மனிதர்களுடைய அபிமானமும், அன்பும் ஏற்பட வேண்டுமல்லவா. அதற்காக நேற்றைய தினம் அந்த அபாயம் நிகழ்ந்தது என்றே நாம் நினைக்க வேண்டுமன்றி வேறல்ல. என் மகன் அந்தச் சமயத்தில் அங்கே இருந்ததனாலேதான் இந்தக் குழந்தைகள் இப்போது உயிரோடு இருப்பதாக தாங்கள் நினைக்கிறீர்கள். அவன் இல்லாமல் இருந்தால், அந்த அபாயமே நேர்ந்திராமல் போனாலும் போயிருக்கும். அல்லது அந்த இடத்தில் அந்தச் சமயத்தில் வேறே மனிதர் யாராவது இருந்து, இவன் செய்த காரியத்தைச் செய்தாலும் செய்திருப்பார். எல் லாம் கடவுள் செயல். ஈசன் நேரே வந்து எதையும் செய்கிற தில்லை; யாராகிலும் ஒரு மனிதரைக் கொண்டுதான் எந்தக் காரியத்தையும் முடிக்க வேண்டும்; என் மகனில்லாவிட்டால், இன்னொருவனைக் கொண்டு கடவுள் இந்த அபாயத்தை விலக்கி இருப்பார். ஆகையால் இந்த மனிதன் தான் காப்பாற்றினான்; அந்த மனிதன்தான் காப்பாற்றினான் என்ற கீர்த்தியும், பெருமையும் நாம் தப்பாக வகித்துக் கொள்ளும் விஷயங்கள். அந்த அபாயம் நிவர்த்தியான விஷயத்தில், தாங்கள் எங்களைப் புகழுவதை விட, கடவுள், இந்த விபத்தை நிவர்த்திக்க, எங்களைப் பொறுக்கி எடுத்தானே என்பதையே ஒரு பெருத்த பாக்கியமாகவும், அருளாகவும் நாங்கள் மதிக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்களைப் போன்ற சாதாரண ஜனங்கள் எவ்வளவு காலம் தவம் புரிந்தாலும் இந்த மஹா லுக்குள் அடிவைக்கக் கிடைக்குமா, தங்களைப் போன்றவர்கள் எல்லாம் எங்களை ஒரு பொருட்டாக மதித்துப் பேசுவதும் நேருமா? ஆகையால், தாங்கள் இந்த அற்ப உதவியை கருதி அடிக்கடி என் மகனைப் புகழ்வது எனக்கு நிரம்பவும் வஜ்ஜை யாக இருக்கிறது” என்று தமாஷாகப் புன்சிரிப்போடு கூறினாள்.

அவ்வாறு பேசிய மாதுதான், தங்களது உயிரைக் காத்த யெளவனப் புருஷனது தாய் என்று யூகித்துக் கொண்ட கோகி லாம்பாள் மிகுந்த வெட்கமும் நாணமும் அடைந்தவளாய்த் தலைகுனிந்து பணிவாக நின்றாள். செளந்தரவல்லி தனது தாயும் கற்பகவல்லியும் இருந்த இடத்திற்கு ஓடி வந்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனித்துக் கேட்கலானாள். தனது மகனைப் புகழ வேண்டாமெனக் கேட்டுக் கொண்ட கற்பக