பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

செளந்தர கோகிலம்



களுடைய நற்குண நல்லொழுக்கத்தைப் பொருத்து மற்ற விசேஷ் மதிப்புகள் ஏற்படவேண்டும். ஆகையால் இனிமேல் நீ ஒ. விஷயத்தை முக்கியமாக நினைவில் வைத்துக்கொள். ஒருவரை கண்டால் அவருடைய தேக அமைப்பை ஆராய்ச்சி செய் வேண்டுமென்றும்; அவர் அழகாக இருக்கிறாரா அல்ல. குருபியாக இருக்கிறாரா என்று அறிய வேண்டுமென்றும் உன் மனதில் தடுக்க முடியாமல் உண்டாகும் அந்த அவா:ை விலக்கிவிட்டு, அவர் நற்குண நல்லொழுக்கம் உடையவர அல்லரா என்பதை அறிவதில் மாத்திரம் உன் மனதை செலுத்து” என்று மிகுந்த வாத்சல்யத்தோடு கூறினாள்.

அதற்குள் அந்த வண்டி நமது யெளவனப் புருஷனுக்கு பக்கத்தில் வந்து அவனைக் கடந்து சென்றது. ஆகையால், அந்த பொற்பாவைகள் இருவரும் தமது சம்பாஷணை:ை அவ்வளவோடு நிறுத்திக் கொண்டனர்; அந்த வண்டி அவனை கடந்து சுமார் 10 கஜ தூரம் சென்றபோது, செளந்தரவல்லி என் பெயர் கொண்ட மேகவருணப் பட்டாடைக்காரி, தனது சுந்த வதனத்தை இரண்டொரு முறை திருப்பிப் பின்புறத்தில் வந் அந்த யெளவனப் புருஷனைக் கடாrதித்துவிட்டு அப்புறம் திரும்: வண்டிக்காரனைப் பார்த்து "அடே மினியா வண்டியை ஏன் இவ்வளவு அவசரமாக ஒட்டுகிறாய்? நாம் வீட்டை விட்( இவ்வளவு தூரம் எதற்காக வருகிறோம்? நல்ல காற்று வாங்குவதற்காக வரும்போது, இப்படி தடதடவென்று வந்து மடமடவென்று போனால், இதில் என்ன சுகமிருக்கிறது. இ.ை விட வீட்டிலேயே சிவனேயென்று இருந்துவிடலாமே" என்றாள்

அதுகாறும் அந்தப் பெண்மணிகளுள் எவளும் அந்: வண்டிக்காரனிடத்தில் அவ்வளவு கடுமையாகப் பேசினதில்லை ஆகையால், எதிர்பாராத அந்த மொழியைக்கேட்ட வண்டி காரன் திடுக்கிட்டு நடுநடுங்கி குதிரையின் விசையைத் தளர்த் வண்டியை மெல்ல மெல்ல ஒட்டத் தொடங்கினான்.

அந்த வண்டியில் அவ்வாறு சம்பாஷணை நடந்ததை சிறிதும் உணராதவனாய் நமது யெளவனச் சிறியோன் அவர்களது உன்னத வடிவழகில் ஈடுபட்டவனாய்க் கீழே குனிந்து நடப்பவன்போல நடித்துக் கடைக்கண்ணால் தனது கமட்டுப் பார்வையை அவர்களின் மீது செலுத்தி, அவர்களது