பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 53

துபாஷ் வீட்டுப் பெண்கள் தொற்றிக்கொண்டு தாறுமாறாக இழு பட்டுக் கூக்குரல் செய்கிறார்கள். ஒரு பனையளவு ஆழமுள்ள பள்ளத்தின் ஒரமாக வண்டி போய்விட்டது. அந்த வண்டிக்குப் பக்கத்தில் என்னைத் தவிர, வேறே ஜனங்கள் யாரும் இல்லை. நான் மாத்திரம் இன்னம் ஒரு நிமிஷம் பின் தங்கி இருந்தால், அது மகா கோரமான காட்சியாக முடிந்திருக்கும்; வண்டி, குதிரை எல்லாம் பள்ளத்தில் விழுந்திருக்கும். ஸாரட்டுக்குள் தொற்றிக் கொண்டிருந்த பெண்களும் அப்படியே விழுந்து நசுங்கிப் போய் அதோகதியாகி இருப்பார்கள். அந்தச் சமயத்தில் தெய்வந்தான் என் மனசிலிருந்து பெருத்த வீராவேசத்தையும் அபாரமான துணிச்சலையும் கொடுத்து என்னைத் துாண்டி விட்டது! நான் உடனே ஒடிக் குதிரையின் கடிவாளவாரைப் பிடித்து அதை ராஜபாட்டையில் திருப்பிவிட்டு, என் கையி லிருந்த பேனாக்கத்தியால் வார்களை அறுத்துக் குதிரையையும் வண்டியையும் வேறாக்கி அந்தப் பெண்களுடைய உயிர் களையும், குதிரையின் உயிரையும் தப்ப வைத்தேன். உடனே பெண்கள் இருவரும் வண்டியின் கூண்டைவிட்டுத் தரையில் இறங்கினார்கள். அந்த வண்டியும் குதிரையும் உபயோகமற்றுப் போய்விட்டபடியாலும், அவர்களோடு வந்த வண்டிக்காரன் கீழே விழுந்து அடிபட்டு எழுந்திருக்கமாட்டாமல் கிடந்தமை யாலும், நான் உடனே திருவல்லிக்கேணிக்குப் போய், அவர்க ளுக்காக ஒரு குதிரை வண்டி கொண்டு வந்தேன். அவர்கள் என்னையும் வண்டியில் உட்கார்ந்து கொள்ளச் சொன்னார்கள். நானும் குதிரை வண்டியில் உட்கார்ந்து வந்து அவர்களுடைய பங்களாவின் வாசலில் இறங்கி வந்தேன். வரும்போது என்னுடைய மனசு அதே விஷயத்தில் லயித்துப் போய்விட்டது. நான் அந்தச் சமயத்தில் பாய்ந்து குதிரையைத் திருப்பி விடா திருந்து, வண்டி பள்ளத்தில் வீழ்ந்திருந்தால், அவர்களுடைய கதி எப்படி ஆகியிருக்கும் என்ற சிந்தனையில் என் மனசு ஆழ்ந்து போய்விட்டது. ஆகையால், நம்முடைய வீடு வந்ததைக்கூட உணராமல் நான் கொஞ்சதூரம் மேற்கே போய்த் திரும்பி வந்தேன். இன்றைய தினம் எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த அபாயத்தினாலேதான், நான் சிமிணி முதலிய எந்தச் சாமானை யும் வாங்கிவர முடியாமல் போய்விட்டது” என்று கூறினான்.