பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

செளந்தர கோகிலம்



நினைத்தாளல்லவா? அந்த நினைவும் அச்சமும் கவலையும் உடனே நீங்கிப் போயின. அவர்கள் தங்களிடத்தில் நிரம்பவும் பிரீதியாகவும் சிநேக பாவமாகவும் வந்திருக்கிறார்கள் என்பது கற்பகவல்லியம்மாளுக்கு உடனே செவ்வையாக விளங்கி விட்டது. இருந்தாலும் அவர்கள் அவ்வளவு பொருட்களை எடுத்துக்கொண்டு வரவேண்டிய காரணம் என்ன என்பதை அறியமாட்டாமல் சிறிது நேரம் தவித்தபின் பூஞ்சோலை பம்மாளை அன்போடு பார்த்துப் புன்னகை செய்து, "இந்தத் தினத்தை நல்ல சுப தினமென்றுதான் மதிக்க வேண்டும்; இப்படிப்பட்ட மகா உயர்வான மனிதர்களுடைய தரிசனம் எங்களுக்குக் கிடைக்குமென்று நாங்கள் சொப்பனத்திலும் நினைத்து அறியோம். மகாலட்சுமியே நேரில் வந்து காட்சி கொடுப்பதுபோல இருக்கிறது: ஆகா என்னுடைய உள்ளமும் உடம்பும் எப்படிக் குளிர்ந்து ஆனந்த பரவசமடைகின்றன தெரியுமா அதை நான் எப்படித்தான் வெளியிட்டுச் சொல்லப் போகிறேன்! சந்தோஷலட்சுமி தாண்டவமாடும் மனுஷ்யாள் போகும் இடமெல்லாம் இப்படித் தான் ஆனந்தமயமாக நிரம்பிவிடும்போலிருக்கிறது" என்று மனப்பூர்வமான விசுவாசத்தோடும் உருக்கமாகவும் கூறினாள். .

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் அளவிறந்த களிப்பும் ஆனந்தமும் அடைந்தவளாய் நகைத்து, "சரி சரி! நன்றாகப் பேசுகிறீர்கள் தங்கள் குமாரருடைய குண விசேஷங்களை நான் நேற்றையதினம் கேள்விப்பட்டபோதே, தாங்கள் அவருக்குமேல் ஆயிரம் மடங்கு நற்குணமுடையவர்களாக இருப்பீர்களென்று எண்ணிக்கொண்டே வந்தேன். நான் எண்ணியது சரியாகவே இருக்கிறது. இருந்தாலும், தாங்கள் இப்போது சொன்ன வார்த்தைகளுள் ஒன்றை மாத்திரம் மாற்றிச் சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். என்னிடத்தில் தாண்டவமாடும் சந்தோஷ லட்சுமியை நான் தங்களுக்குப் பரப்புவதாகச் சொல்லுவதைவிட, இந்த சந்தோஷ லட்சுமி தங்களால் கொடுக்கப்பட்ட பிச்சையென்றே சொல்ல வேண்டும். நேற்றைய தினம் தங்களுடைய குமாரர் மாத்திரம் அந்தக் கடற்கரையில் இல்லாதிருந்தால், இந்நேரம் என்னுடைய வீடு பாழ்த்து இருளடைந்து போயிருக்கும். உயிருக்குயிராக நான் மதித்து