பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 செளந்தர கோகிலம் அழைத்துக் கொண்டுபோய் சாசுவதமாய்த் தாமே வைத்துக் கொள்ளவேண்டுமென்பது அவருடைய கருத்தாம். அதற்காக அவர் ஆளை இங்கே அனுப்பினாராம். அவன் இங்கே வந்து ஒரு மாசகாலம் இருந்து, திருட்டுத்தனமாக அம்மாளைப் பல தடவை கண்டு பேசினானாம். இருவரும் கலந்து யோசனை செய்து, எனக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுத்து, நான் தங்களுக்குப் பாஷாணம் வைத்துக் கொன்றுவிட ஏற்பாடு செய்கிறதென்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டார்களாம். அதுவுமன்றி, திருவிடமருதூரிலுள்ள தங்களுடைய தகப்பனாருடன் அந்த ஆசைநாயகர் வேண்டுமென்றே சிநேகம் செய்துகொண்டு, உங்கள் எல்லோரையும் திருவிழாவுக்கு அழைக்கும்படி அவரைத் தூண்டி ஒரு கடிதம் எழுதச் சொன்னாராம். எப்படியாவது அம்மாளைத் தாங்கள் அனுப்பும்படி செய்து அவர்கள் ஊருக்குப் போன பிறகு தங்களைக் கொன்றுவிட்டால், அம்மாள்பேரில் சந்தேகம் ஏற்படாது, அவர்களுடைய கோரிக்கையும் பூர்த்தி அடையும் என்ற எண்ணத்தோடு அவர்கள் இவ்விதமாக ஏற்பாடு செய்திருப்பதாக அந்த மனிதன் என்னிடம் சொல்லி ஐயாயிரம் ரூபாய் பணத் தொகையையும் கொடுத்தான். அவ்வளவு அபாரமான பணத் தொகை கிடைக்கிறதே என்ற பேராசை யாலும், நான் எஜமானியம்மாளிடம் வைத்திருந்த பயபக்தி விசுவாசத்தினாலும், ஏமாறிப்போய் நான் இந்தக் காரியத்தைச் செய்வதாக ஒப்புக்கொண்டு பணத்தை வாங்கி ஒரிடத்தில் புதைத்து வைத்தேன். அதை இன்று தங்களுக்குப் போட்டுவிட வேண்டுமென்று தனியாகக் கொஞ்சம் வடை மாவில் அதைக்கலந்து நான்கு வடைகள் சுட்டு இலையில் கட்டி ஒளித்து வைத்திருந்தேன். தாங்கள் பலகாரம் கொண்டுவரச் சொன்னால் அதை எடுத்துக்கொண்டு வரலாமென்றிருந்தேன். தெய்வமே முன்னிட்டு அது என் வயிற்றிலேயே போய்ச் சேரும்படி செய்துவிட்டது” என்றான். அவன் கூறிய சொற்களைக் கேட்ட திவான் திடுக்கிட்டு திக்பிரமைகொண்டு, 'ஆ! அப்படியா திருவிடமருதூரிலிருந்து வந்திருந்த ஆள் அப்படியா சொன்னான். அவன் குறித்தது என் சம்சாரத்தைத்தானா? நீ தெளிவான ஞாபகத்தோடு சொல்லுகி றாயா? அல்லது, ஞாபகப் பிசகாகவோ, வேண்டுமென்று