பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 103

துயரமும், ஆத்திரமும் வந்து சூழ்ந்து கொண்டன. என் வேளைப் பிசகு இது நானே போய்ப் பேசி இருக்கக் கூடாதா? என்னிடம் என் தமயனார் இந்த வரலாற்றைத் தெரிவித்திருந்தால், நான் உன்னிடம் இதைச் சொல்லவே போகிறதில்லை. என் தமயனார் கூட இதையெல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டாமென்று கடைசியில் என்னிடம் சொல்லி எச்சரித்துவிட்டு டெலிபோனை விட்டுப் போனார். எனக்குப் பதிலாக நீயே இருந்து அவருடன் பேசி எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டாயென்பதை அவர் அறிந்தால், என் மேல் அவர் கடுமையாகக் கோபித்துக் கொண்டாலும் கொள்வார். அவர் இதற்குமுன் சாதாரணமான விஷயங்களைப்பற்றிப் பேசியதுபோல இப்போதும் பேசுவார் என்று நினைத்தல்லவா நான் பைத்தியக்காரத்தனம் செய்து விட்டேன்’ என்று முற்றிலும் விசனகரமாகவும் அயர்வாகவும் வாட்டமாகவும் கூறினாள்.

அதைக் கேட்ட செளந்தரவல்லியம்மாள், “உன்மேல் என்ன தப்பிதம்! அந்தக் கெட்ட கழுதை போய்த் தாறுமாறாய் நடந்து கொண்டால், அதற்கு நீதான் உத்தரவாதியா? பசுபோல இருந்த அந்த இராrசி இப்படிப் புலிபோலப் பாய்வாள் என்று யாருக்குத்தான் தெரியும். உன் தமயனார் இப்பேர்ப்பட்ட விபரீத சங்கதியைச் சொல்லப் போகிறார் என்பது உனக்குக் கனவிலும் தெரிந்திருக்க நியாயமில்லை. இதைப்பற்றி சந்தேகிக்க கொஞ்சமாவது ஏதுவிருந்தால் நீ என்னை டெலிபோனுக்கு அனுப்பி இருக்கவே மாட்டாய். நீ இதைக் கேட்டுக்கொண்டு பேசாமல் இருந்து ஏதாவது சாக்குச் சொல்லி மெதுவாய்ப் புறப்பட்டு வீட்டுக்குப் போய்விடுவாய். அதன்பிறகு உங்கள் இருவரையும் நான் இந்த ஜென்மத்திலேயே பார்க்க முடியாமல் போயிருக்கும். காரியம் இப்படி நடந்ததும் தெய்வத்தின் செயலென்றே நினைக்கிறேன். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் நான் உனக்குப் பதிலாக டெலிபோனில் உன் தமயனாரோடு பேசவேண்டுமென்று தெய்வம்தான் நம் இருவருக்கும் புத்தி கொடுத்ததென்று நினைக்கிறேன். இந்தத் துஷ்டையின் காரியங் களை நான் இப்போதே தெரிந்து கொண்டது நல்லதாயிற்று. கெட்ட விஷயங்களை, பெரிய மரமான பிறகு கோடரியைக்