பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் 119

பிரம்மாண்டமான நந்திகேசுவரரையும், நான்கு வீதிகளையும் காணவே, அவரது மனத்தில் புதைந்து கிடந்த பழைய காலத்து நினைவுகள் யாவும் சண்ட மாருதம்போல எழுந்து கோடாதுகோடி ஞாபகங்களையும், சம்பந்தங்களையும் பலவகைப்பட்ட உணர்ச்சிகளையும் கிளப்பிவிட்டன.

அத்தகைய சகிக்கவொண்ணாத மன நிலைமையில் திவான் சாமியார் அந்த ஊர் தபால் ஆபீசை அடைந்து அதன் தலைவரைக் கண்டு, அவருடன் இங்கிலீஷில் சம்பாஷித்து, தாம் வெளியிட்ட விளம்பரத்திற்கு ஏதேனும் மறுமொழி வந்திருக் கிறதா வென்று மிகுந்த ஆவலோடும் மனவேதனையோடும் வினவினார். இளைத்துக் கறுத்துத் துரும்புபோல மெலிந்திருந்த அந்தப் பரதேசியைக் கண்ட தபால் கச்சேரித் தலைவர் முதலில் கம்பீரமாக நிமிர்ந்து கருடப்பார்வை பார்த்து அசட்டையாகவும் அலட்சியமாகவும் அவரை மதித்துத் துடுக்காகவும் இளக்க மாகவும் மறுமொழி கூறத்தொடங்கினார். ஆனாலும், சாமியார் இங்கிலீஷ் அழகாகவும் விநயமாகவும் சம்பாஷித்ததைக் கண்டு அவரிடம் சிறிதளவு மதிப்பு வைத்து, பட்டுவாடா செய்யப் படாமல் பாக்கியாய்த் தமது கச்சேரியில் வைக்கப்பட்டிருந்த காகிதங்களையெல்லாம் எடுத்து ஆராய்ந்து பார்க்கத் தொடங்கினார். அந்த ஒரு நிமிஷமும் நமது சாமியாருக்கு ஒரு யுகமாகத் தோன்றியது. அவரது ஆவல் வேதனை அபாரமாகப் பெருகி உச்சநிலையை அடைந்துவிட்டது. பத்து நிமிஷ காலம் வரையில் காகிதங்களை ஆராய்ந்து சோதனை செய்து பார்த்த தபால் அதிகாரி தமது உதட்டைப் பிதுக்கி, “அப்படிப்பட்ட கடிதங்கள் ஒன்றும் வரவில்லை” என்று கூறினார். அது திவான் சாமியாருக்கு நம்பிக்கைப்படவில்லை. ஆதலால் அவர் உடனே தபால் தலைவரை நோக்கி, “ஐயா! தயவு செய்து நன்றாய்ப் பார்த்துச் சொல்லுங்கள்; ஒருவேளை எங்கேயாவது காகிதங் களுக்குள் காகிதமாய் மறைந்திருக்கலாம். பிரயாசை கொடுப் பதற்கு மன்னிக்க வேண்டும்” என்று நயமாகவும் பணிவாகவும் ஏக்கத்தோடும் விசனகரமாகவும் கூறினார். “. . .

காகிதங்களை யெல்லாம் பார்த்து முடித்த தபால் தலைவர். “ஐயா! நன்றாய்ப் பார்த்துச் சொல்வது ஒன்று, நன்றாய்ப் பார்க்காமல் சொல்லுவதொன்று உண்டா? நன்றாய்ப்