பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 செளந்தர கோகிலம்

உடனே செளந்தரவல்லியம்மாள் அந்த வேலைக்காரனை நோக்கி, “ஏனப்பா, வந்திருப்பவர்கள் எல்லோரும் ஆண் பிள்ளைகளா, பெண் பிள்ளைகளும் இருக்கிறார்களோ என்றாள்.

வேலைக்காரன், ‘பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள்” என்றான்.

அதைக்கேட்ட செளந்தரவல்லி தனது தாயை நோக்கி, ‘அம்மா! நீங்கள் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் பேசாது படுத்துக் கொண்டிருங்கள். வருகிறவர்களுடன் நான் பேசுகிறேன். உங்களுக்கு உடம்பு சரியாக இல்லையென்பதையும், நான் இவர்களிடம் தெரிவிக்கிறேன்; இவர்கள் உங்களை உபத்திர விக்காமல் பார்த்துக் கொள்ளுகிறேன். இன்று சாயங்காலம் நான் துங்கி விழித்தேன். விழித்தவுடன் உங்களையும் காணவில்லை; புஷ்பாவதியம்மாளையும் காணவில்லை. நான் உடனே வேலைக் காரர்களைக் கூப்பிட்டு விசாரித்தேன். அக்காளைத் தேடிக் கொண்டு நீங்கள் பகல் நான்கு மணிக்கே எங்கேயோ போய் விட்டதாகச் சொன்னார்கள். புஷ்பாவதி அம்மாளுக்கு உடம்பில் ஏதோ தொந்தரவு ஏற்பட்டுப் போனதாகவும், தான் போய்ப் படுத்துத் துரங்கினால் அது சரியாய்ப் போகுமென்றும், தானே எழுந்து வருகிற வரையில் யாரும் வந்து தன்னை எழுப்ப வேண்டாம் என்றும் அந்த அம்மாள் வேலைக்காரிகளிடம் சொல்லிவிட்டு தனியான ஒரிடத்தில் படுத்துத் துங்குவதாகவும் கேள்வியுற்றேன். நான் உடனே போய்ப் பார்த்தேன். அந்த அம்மாள் துங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பக் கூடாதென்று வந்துவிட்டேன். ஆனால் உங்கள் இரண்டு பேரைப் பற்றித்தான் எனக்கு நிரம்பவும் அதிகமாக திகில் உண்டாகி விட்டது. நான் பிரமாதமாக நடுங்கிப்போய் விட்டேன். நான் சும்மா இருக்கவும் முடியவில்லை; நான் எங்கே போய் உங்களைத் தேடுவதென்பதும் தெரியவில்லை. நான் உடனே ஒரு காரியம் செய்தேன். நம்முடைய வேலைக்காரர்களில் நாலைந்து மனிதரைக் கூப்பிட்டு இந்த ஊரிலுள்ள நம்முடைய சொந்த ஜனங்களின் வீடுகளுக்கெல்லாம் போய் இந்த மாதிரி நீங்கள் இருவரும் திரும்பி வரவில்லையென்ற சங்கதியைச் சொல்லி, அவர்களை உடனே அழைத்துவரும்படி சொல்லியனுப்பினேன். சிலருக்கு டெலிபோன் மூலமாகவும் செய்தியனுப்பினேன். ஆனால், நீங்கள் குறித்த