பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 செளந்தர கோகிலம்

கலங்கித் தனது கண்களை மூடியபடி அப்படியே சுவரில் சாய்ந்து விட்டாள்.

அங்கே கூடியிருந்த உறவினர்களும், சிப்பந்திகளும் கோகிலாம்பாள் காணாமற் போயிருக்கும் விஷயத்திலேயே தங்களது முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்தனர். ஆதலால், பூஞ்சோலையம்மாளது மனத் தடுமாற்றத்தின் உண்மையான காரணத்தைப் பற்றி அவர்கள் அப்போதும் சந்தேகிக்காமல் இருந்தனர். செளந்தரவல்லியம்மாள் தனது தாய் நிரம்பவும் அவமானப்பட்டு நரக வேதனை அநுபவிக்கிறாள் என்று உணர்ந்து மிகுந்த திருப்தியும் அதிகரித்த ஊக்கமும் அடைந்து, தான் எடுத்த காரியத்தைக் கடைசி வரையில் நிறைவேற்றி வைத்தே மறு வேலை பார்க்க வேண்டுமென்ற தீர்மானத்தை முன்னிலும் அதிகமாக ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு, துஷ்டர்களையும், அக்கிரமிகளையும் சிறிதும் இரக்கமின்றிக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கும் கடவுள் போலவும், நியாயாதிபதி போலவும், சிறிதும் மனத்தளர்ச்சியாவது, இரக்கமாவது கொள்ளாமல் மிகுந்த மனோ திடத்துடன் நின்றாள்.

ஐந்து நிமிஷ காலத்தில் பொன்னுரங்க முதலியார் சிறிதும் கபடமற்ற முகத்தோற்றத்தோடு அங்கே வந்து சேர்ந்தார். ஆயினும், கோகிலாம்பாளும் அவளது தாயும் எப்படிக் காணாமல் போயிருப்பார்களென்ற விஷயம் அவரது மனத்தில் மிகுந்த கவலையையும் ஆவலையும் பதைப்பையும் உண்டாக்கியது என்பதை மாத்திரம் அவரது முகம் காட்டியது.

அவரைக் கண்டவுடன் அங்கிருந்தோரில் சிலர் அவரை அடிக்க வருபவர்போலச் சீறிப் பாய்ந்து பலவிதமான கேள்வி களைக் கேட்கலாயினர். வேறு சிலர் அவரைப் பார்த்துத் தாறு மாறாகத் திட்ட ஆரம்பித்தனர். மற்றும் சிலர் குறுக்கில் விழுந்து அவர்களைத் தடுத்து ஆத்திரப்படாமல் நிதானமாக விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வதே ஒழுங்கு என்றனர். சிலர், “பெண் எங்கே ஐயா?” என்றனர். சிலர், “பெண்ணைக் கொலைசெய்து விட்டீரா? உண்மையைச் சொல்லும்” என்றனர்.

தாம் அவ்வாறு நடத்தப்படுவோம் என்பதைக் கனவிலும் நினையாதவரும் நிரபராதியுமான பொன்னுரங்க முதலியார்