பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 செளந்தர கோகிலம்

களன்று. ஆதலால், அவர்கள் மிகுந்த உற்சாகமும் மனத்திடமும் இன்பகரமான மனவெழுச்சியும் அடைந்தனர். உடனே கோகிலாம்பாள் புஷ்பாவதியை நோக்கி, ‘அம்மா இன்றைய தினம் என் மானத்தையும் உயிரையும் காப்பாற்றியது உங்கள் தமையனாரே! அவர்கள் இன்று பெருத்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார்கள். இல்லாவிட்டால் இந்நேரம் என் பினம் மைலாப்பூருக்கு அப்பாலுள்ள தாழைக் காட்டில் கிடக்கும். காக்கைகளும் நரிகளும் அதைத் தின்று கொண்டிருக்கும். அந்தச் செய்தி இவர்களுக்குக் கூட எட்டி இராதென்றே நினைக்கிறேன். இதற்கு முன் இரண்டு தடவைகளில் இன்னொரு புண்ணியவான் என் உயிரைக் காப்பாற்றினார். இன்று உங்கள் தமையனார் தெய்வம் போல நல்ல சமயத்தில் வந்து தோன்றி, எல்லோரையும் துப்பாக்கியால் சுட்டு ஒரு நிமிஷத்தில் ஒட்டி விட்டார்கள். அது மாத்திரமல்ல. அதன் பிறகு அவர்கள் என்னை உங்களுடைய பங்களாவுக்குக் கொண்டுபோய், அவ்விடத்தில் எனக்குச் செய்த உபசாரங்களை நான் என்னவென்று சொல்லப் போகிறேன்! அதை ராஜோபசாரமென்றே சொல்ல வேண்டும்’ என்று நிரம்பவும் உருக்கமாகக் கூறினாள்.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாளது கண்களும் மனதும் நன்றியறிதலின் பெருக்கினால் முற்றிலும் கலங்கி இளகிப் போயின. அந்த அம்மாளும் புஷ்பாவதிக்கு உபசார வார்த்தை கூறத் தொடங்கி, “நமக்கு வேறே ஆண் துணை இல்லையல்லவா. இவர்கள் இருவரும்தான் இனி உங்கள் குடும்பத்துக்குப் பற்று கோல் என்று சொல்வது போலக் கடவுள் இந்த அபாயங்களைக் காட்டி இவர்கள் இருவரையும் கொண்டு அவைகளை நிவர்த்தி செய்திருக்கிறார் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. எல்லாம் சர்வேசனுடைய திருவிளையாட்டு. நம்மால் ஆவது ஒன்றுமில்லை. ஆனால் உங்கள் தமையனாருக்கு மாத்திரம் ஒரு மனக்குறை இருக்கலாம். அவருக்கு நம்முடைய கோகிலாவைக் கட்டிக் கொள்ள வேண்டுமென்கிற ஆசை உள்ளுற இருப்பது நன்றாகத் தெரிகிறது. அந்த ஒரு விஷயத்தில்தான் நாங்கள் செயலற்றவர் களாய் இருக்கிறோம். நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து இந்தக் கலியான ஏற்பாட்டை மாற்ற நினைத்தால்கூட, காரியம் ஒரு நாளும் நிறைவேறாது. நம்முடைய செளந்தரவல்லி இவரைத்தான்