பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 செளந்தர கோகிலம்

இருக்கிறதடா! வாருங்கள் ஒடிப் போவோம்” என்று தமக்குள் அவசரமாகக் கூறிக்கொண்டனர். உடனே ஐவரும் திக்காளுக் கொருவராய் விழுந்து மறைந்து ஒடத் தலைப்பட்டனர். அதைக் கண்ட சுந்தரமூர்த்தி முதலியார், ‘விடாதே விடாதே பிடி பிடி என்று ஒங்கிக் கூச்சலிட்டுக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்து மேலும் இரண்டு மூன்று வெடிகள் போட்டுக் கொண்டு தாழைப் புதருக்கு அப்பால் சிறிது தூரம் ஓடினார். அவரைத் தொடர்ந்து மினியனும் அவரது வேலைக்காரனும் ஒடினார்கள். ஆனால், அந்த முரட்டு மனிதர்களுள் எவனும் பிடிபடாமல் ஒரு rணநேரத்தில் எங்கேயோ போய் மாயமாய் மறைந்து போய்விட்டனர். நம்மவர் மூவரும் மேலும் இரண்டு மூன்று நிமிஷம் வரையில் அங்குமிங்கும் ஒடித் தேடிப் பார்த்து விட்டு, அதற்குமேல் எங்கும் போகமாட்டாதவராய்த் திரும்பிக் கோகிலாம்பாள் இருந்த இடத்திற்கு ஓடிவந்தனர்.

கோகிலாம்பாளின் கால்களும் கைகளும் சொற்பமாய்க் கட்டப்பட்டிருந்தன. வாயில் துணி அடைக்கப்பட்டிருந்தது. அதனால் அவள் மிகுந்த வேதனை அடைந்து கொண்டிருந்தாள். ஆனாலும், மினியனும் சுந்தரமூர்த்தி முதலியாரும் இன்னொரு வனும் தனக்கு உதவிக்கு வந்ததையும், அவர்கள் துப்பாக்கியால் சுட்டதைக்கண்டு சிப்பாயிகள் ஒடிப் போனதையும் காண அவளுக்கு ஓரளவு உயிர் திரும்பியது. ஆயினும், தான் எதிர்பாரா வகையில் அந்த அசந்தர்ப்பமான நிலைமையில் சுந்தரமூர்த்தி முதலியார் வந்து தன்னைக் கண்டது அவளால் பொறுக்க இயலாத மன வேதனையையும் வெட்கத்தையும் உண்டாக்கி விட்டது. தான் அந்த இடத்திற்கு வந்த வரலாற்றையெல்லாம் அவர் ஒருக்கால் மினியனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருப் பாரோ என்ற கிலேசமும், பீதியும் எழுந்து அவளது உயிரைப் பருகத் தொடங்கின. தனது நிச்சயதார்த்த சமயத்தில் திடீரென்று கண்ணபிரான் கைதி செய்யப்பட்டது, அதன் பிறகு சாயப்புவினால் கற்பகவல்லியம்மாள் அவமானப்பட்டது, பிறகு அந்த அம்மாள் தற்கொலை செய்துகொள்வதாக எழுதி வைத்துப்போனது முதலிய சம்பவங்களால் முற்றிலும் புண்பட்டு முறிந்து போயிருந்த மனநிலைமையில், அவளுக்கு இன்ஸ்பெக்ட