உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணப் பைத்தியம் 163

பறிக்கத் தக்கதாகவும் உயிரைக் கொள்ளை கொள்ளத்தக்க தாகவும் இருந்தன. நான் அந்தப் படத்தை மெதுவாக எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன். பிற்பாடு நானும் அந்தப் பையனும் வேடிக்கையாகக் கடற்கரைக்குப் போயிருந்த சமயத்தில், அந்தப் படத்தை அவன் பார்க்கும்படி தந்திரமாக நடந்து கொண்டேன். அவன் படத்தைப் பார்த்து, ‘இது யாருடையது?’ என்று கேட்டான். உன்னுடையது என்று நான் சொல்லிவிட்டேன். அவன் உடனே அதை வாங்கிப் பார்த்து முற்றிலும் பிரமித்துப் போய் வெகுநேரம் வரையில் அப்படியே இருந்துவிட்டான். முடிவில் நான் படத்தை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். அதைப் பார்த்தது முதல் பையன் உன்னை நினைத்து நினைத்து உருகிக்கொண்டே இருக்கிறான். அவனுக்கு சாப்பாட்டிலும் சரி, வேறு எதிலும் சரி, கவனம் செல்லவே இல்லை. உன் மோகமே பெரிய பித்தாய்ப் பிடித்துத் தலைக்கு ஏறிவிட்டது. அவன் தன் தாய் தகப்பனாரிடம் போய் தான் உன்னை நேரில் பார்த்ததாகவும், நீயல்லாமல் வேறு யாரும் தனக்கு வேண்டாமென்றும், உன்னைக் கலியாணம் செய்யத் தீர்மானிக்கவும் சொல்லிப் பிடிவாதம் பிடிக்கத் தொடங்கி விட்டான். அவர்களுக்கு அவன் ஒரே செல்லக் குழந்தை. ஆகையால், அவனுடைய இஷ்டப்படியே செய்வோமென்றும் என்னை அழைத்து எழெட்டு நாட்களில் வரும் முகூர்த்த தினத்தில் கலியானத்தை முடிக்க வேண்டுமென்று தீர்மானமாகச் சொல்லி லக்னப் பத்திரிகையும் தயாரித்துக் கொடுத்து விட்டார்கள். நான் என்னுடைய கலியாணத்தைச் சேர்த்து அவர்களுடைய பங்களாவிலேயே அதே முகூர்த்தத்தில் நடத்தவேண்டும் என்பதையும் சொன்னேன். அதற்கும் அவர்கள் இணங்கி விட்டார்கள்.

புஷ்பாவதி : ஆம், அதெல்லாம் சரிதான். ஆள் மாறாட்ட மாக நீங்கள் வேறு படத்தைக் காட்டி இருக்கிறீர்களே, கலியான சமயத்தில் அதனால் ஏதாவது உடத்திரவம் உண்டாகுமோ?

சுந்தரமூர்த்தி முதலியார் : அந்தப் படத்தை அவளுடைய தாய் தகப்பன்மார் பார்க்கவில்லை; பையன் மாத்திரம்தான் பார்த்திருக்கிறான். கலியான சமயத்தில் அவன் தனக்குப்