பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 செளந்தர கோகிலம்

முண்டைச்சி. பலமாக வேஷம் போட்டுக்கொண்டு எவ்வளவு தைரியமாய் வந்து மணையில் உட்கார்ந்து கொண்டாய். மகாராஜனுடைய வீட்டுக் குழந்தைக்குக் குறைவான அந்தஸ் துள்ளவர் உனக்குத் தகாது போலிருக்கிறதே! போடி எழுந்து நாயே” என்று ஆத்திரமாகக் கூறி புஷ்பாவதியின் கையைப் பிடித்துப் பரபரவென்று அப்பால் இழுத்துவிட்டு, அவளுடைய முதுகில் ஒர் உதை கொடுத்தாள். அந்த மரியாதையைப் பெற்றுக் கொண்ட புஷ்பாவதி குன்றிக் குறுகித் தலையைக் கீழே கவிழ்த்தபடி ஜனக் கும்பலுக்குள் நுழைந்து மறைந்து கொண்டாள். உடனே போலீஸ் கமிஷனர், ‘அம்மா! அந்தப் பெண் நல்லவள். அவள் பேரில் குற்றமில்லை. அவளை உடத்திரவிக்க வேண்டாம். கொஞ்சம் பொறுமையோடிருந்து இன்னொரு கடிதத்தையும் கேளுங்கள். அதையும் ஐயா படிக்கட்டும்,’ என்றார்.

உடனே ஜனங்கள் ஒருவாறு அமைதியடைய, அழகிய மணவாளர் இன்னொரு கடிதத்தையும் எடுத்துப் படித்தார். அதன் மேல் விலாசம் முன் கடிதத்தின் மேல் விலாசம் போலவே இருந்தது. அதன் உள் விஷயம் அடியில் வருமாறு எழுதப் பட்டிருந்தது:

தேவரீர் அன்னை தந்தையார் பொற்பாத கமலங்களில் துளஸியம்மாள் அநேக சாஷ்டாங்க தெண்டனிட்டு எழுதுவது.

தாங்கள் இருவரும் இந்த அநாதையிடத்தில் இவ்வளவு வர்மம் பாராட்டுவதைக் காணக் காண, என் மனம் படும்பாடு சொல்ல முடியவில்லை. நான் வெளிப் பார்வைக்கு ராஜாத்திப் போல வேஷம் போட்டுக் கொண்டு சந்தோஷமாயிருப்பவள் போல நடித்து ஆடம்பரமாக உலாவி வருகிறேன். ஆனாலும், நான் உள்ளுற, என் கதியை நினைத்து நினைத்து உருகித் தவித்துக் கொண்டிருக்கிறேன். பெற்றோருக்கு அடங்கி இருந்து, அவர்கள் பார்த்து வாழ்க்கைப்படுத்தும் இடத்துக்குப் போயிருந் தால் நான் ஏன் இப்படியெல்லாம் திண்டாடித் தவித்துக் கலங்குகிறேன், ஒரு குடம் பாலில், ஒர் அணுப் பிரமாணம் புளிப்பைக் கலந்தால், அது முறிந்துபோய், மறுபடி பழைய நிலைமைக்கு வர இயலாமல் கெட்டுப் போவதுபோல,