பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 47

கூறிக் கொண்டார். அதன் பிறகு மேலப்பண்ணை முதலியாரிடத் திலிருந்து பிரமாணத்தின் மேல் அடியில் கண்ட வாக்குமூலம் வாங்கப்பட்டது

நான் மேலப்பண்ணைக்குச் சொந்தக்காரர். என் பெயர் கந்தசாமி முதலியார். அந்தப் பண்ணை சுமார் லக்ஷம் ரூபாய் பெறும். நான் சர்க்காருக்கு வருஷத்தில் நிலவரி ரூபாய் 2500-ம், வருமான வரி ரூபா 300-ம் செலுத்துகிறேன். நேற்று நான் ஊரில் இல்லை; ஒர் அவசர காரியமாக வெளியூருக்குப் போய்விட்டு இன்று விடியற்காலையில் வீட்டுக்கு வந்தேன். வந்தவுடன் இந்தச் செய்தியைக் கேள்வியுற்றேன். நேற்று நகை களவாடப் பட்ட சமயத்தில் நான் இல்லை. ஆகையால், அதைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. இது என் குழந்தை; இதன் மேலிருந்த வைர மோதிரம், வைர முகப்புள்ள தங்கச் சங்கிலியும் களவாடப்பட்டுப் போனதாகக் கேள்வியுற்றேன். அவை இரண்டையும் எங்கள் ஊர் கிருஷ்ணபத்தர் செய்து கொடுத்தார். மோதிரம் ஐந்நூறு ரூபாய் அடங்கியது; சங்கிலி இரண்டாயிரத்து முன்னுாறு ரூபாய் பிடித்தது. கோர்ட்டார் வசத்தில் இருக்கும் சங்கிலித்துண்டு என் குழந்தையின் மேலிருந்த சங்கிலியின் துண்டுதான். அவ்வளவுதான் எனக்குத் தெரியும், நானும் இந்தக் கைதியும் இதற்குமுன் ஒருவரையொருவர் அறிந்தவர்களன்று; இவருக்கும் எனக்கும் பகைமையாவது வேறு எவ்விதச் சம்பந்த மாவது இல்லை. நேற்று நடந்த திருட்டு விஷயத்தை என் சம்சாரமும் மற்ற சாட்சிகளும் வந்து ருஜுப்படுத்துவார்கள் - என்று கூறினார்.

உடனே நியாயாதிபதி திவான் சாமியாரை நோக்கி, “ஏன் ஐயா! சாமியாரே! உம்முடைய கட்சியின் நியாயத்தை எடுத்துச் சொல்ல நீர் வக்கீல் யாரையாவது அமர்த்த விரும்பவில்லையா?” என்றார்.

திவான் சாமியார், “என்னுடைய நியாயம் எனக்கே சரியாக விளங்கவில்லை. நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டு, வக்கீல் என்ன செய்யப் போகிறார். ஆகையால் நான் வக்கீல் வைக்க

வில்லை” என்றார்.