பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 83

தெரிந்துகொண்டு வந்த தகவல்களைக் கூறியதன்றி, தாம் அன்றைய இரவு ரயிலிலேயே ஏறி மதுரைக்குப் போய் இராமலிங்க முதலியார் கமலவல்லியம்மாள் முதலியோரைப் பற்றி விசாரித்துத் தேடிப் பார்த்துவிட்டு வரத் தீர்மானித்திருப்பதாகவும் கூறினார். தமது இளைய மனைவியைக் கண்டுபிடிக்கும் பொருட்டு திவான் சாமியார் அவ்வாறு வீண்பாடுகள் படுவது தமக்குச் சம்மதியில்லையென்றும், அந்த முயற்சியை அவ்வளவோடு விட்டுவிடவும் குஞ்சிதடாத முதலியார் கூறினார். ஆனாலும், தாம் அதை மாத்திரம் கடைசி முயற்சியாகச் செய்து பார்த்து விடுவதாய்க் கூறி திவான் சாமியார் கிழவரது அநுமதியைப் பெற்றுக் கொண்டார். அவ்வாறு திவான் சாமியார் தனிமையில் போய் அலைவது பிரயாசையாக இருக்குமாதலால், உதவிச் சாமியாரையும் துணைக்கு அழைத்துச் செல்லும்படி கிழவர் கூற, புதல்வர் அதை ஏற்றுக் கொண்டார்.

அன்றைய பகற்பொழுது கழிந்தது; மாலையிலேயே திவான் சாமியாரும், உதவிச் சாமியாரும் திருவையாற்றை விட்டுப் புறப்பட்டுத் தஞ்சைக்கு வந்து இரவில் அவ்விடத்திலிருந்து மதுரைக்குச் சென்ற ரயில் வண்டியில் ஏறி மறுநாள் பகலில் மதுரைக்குப் போய்ச் சேர்ந்தனர். சேர்ந்தவர் தமது ஸ்நானம் அநுஷ்டானம் போஜனம் முதலியவைகளை முடித்துக்கொண்டு இரண்டொரு நாழிகை காலம் வரையில் ஒரிடத்தில் படுத்திருந்து இளைப்பாறிய பின், எழுந்து தமது விசாரணையைச் செய்யத் துவக்கினர். மதுரைப் பட்டணத்தில் செட்டிமார் பல இடங்களில் அரிசி மில்கள் ஸ்தாபித்து நடத்தி வந்தனர். ஆதலால், அவர்கள் இருவரும் அன்றைய தினம் மாலைக்குள் சில இடங்களுக்கே போய் விசாரிக்க இயன்றது. அவ்வாறு விசாரித்த இடங்களில் இராமலிங்க முதலியார் என்ற எவரும் தமக்குத் தெரிந்த வரையில் அந்த ஊரில் அதற்கு முன் அரிசி மில் வைத்திருந்தது மில்லை, அப்போதும் வைத்திருக்கவில்லையென்று அந்த இடங் களில் இருந்தோர் கூறிவிட்டனர். அவர்கள் கூறிய மாதிரியைக் கண்ட திவான் சாமியாருக்கு, தாம் அந்த ஊரில் கமலவல்லியைக் கண்டுபிடிக்க இயலாது என்ற அவநம்பிக்கையும் மனத்தளர்வும் ஏற்பட்டுவிட்டன. ஆயினும், தாம் அவ்வளவோடு விட்டு