பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 செளந்தர கோகிலம்

திறற்கந் தாவளிநாயகி காமுறும் - எழில்வேலா சிறக்கும் தாமரை யோடையின் மேடையில் நிறக்குஞ் சூல்வளை பால் மணிவீசிய திருச்செந்தூர் வரு சேவகனே சுரர் - பெருமானே!

ஆ என்னப்பனே! வடிவேலா! கார்த்திகேயா வள்ளி மணாளா சுப்பிரமண்ய மூர்த்தி பார்வதி பாலா வேலாயுதா சூரசம்மாரா! முருகன் முருகன் என்றால் பழவினைகள் அறுகும் அறுகும் என்பார்களே! என் மனசைக் கொள்ளை கொண்ட மாபெருந்தேவே! என்னப்பனே! மயில்வாகனனே! ஆறுமுகனே! குற்றமற்ற தங்கம் போன்ற குணங்களும் செயல்களும் பெற்றிருப் பதால் சுப்பிரமணியனெனப் புகழப்படும் என் ஒப்பிலா அண்ணலே! நிகரிலா வீரம், மாறாத வெற்றி, மங்களகரம் முதலியவற்றிற்கு உறைவிடமான உன்னையே சதாகாலமும் நினைந்துருகும் இந்த அடிமையின் இடர்களைக் களைவது உனக்கு ஒரு பெரிய காரியமா! தெய்வ யானை யென்னும் ஞான சக்தியும், வள்ளியம்மையார் என்னும் கிரியா சக்தியும் உத்தம பத்தினிமார்களைப்போல உனது இருபுறங்களிலும் எப்போதும் ஆயத்தமாயிருந்து உன் இச்சைப்படி நடக்க, பிரணவம், இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, ஆதிசக்தி, பராசக்தி முதலியவை உனது ஆறுமுகங்களாய் ஜ்வலிக்க சர்வக்ஞம், திருப்தி, அநாதிபோதம், அலுப்த சக்தி, அநந்த சக்தி, சுதந்திரத்துவம் முதலிய மகா உத்தமமான குணங்கள் ஒப்புயர்வற்று உன்னிடம் தழைத்தோங்க, எழிலுக்கும் சாயலுக்கும் சட்டகமான மயில் போன்ற மேனியாகிய வாகனத்தில் அமர்ந்து, சகலமான சுக போகங்கள் ராஜரீகம் முதலியவற்றை எல்லோர்க்கும் வழங்கும் மகாவிஷ்ணுவின் செல்வத் திருமருகனாய் அமோக மங்கள மூர்த்தியாய்த் தனக்குத்தானே நிகரென விளங்கும் என் வெற்றி வேல் முருகா! என்னப்பனே! என் தெய்வ சிகாமணியே! அபயம் அபயம் அடியேன் அபயம்” என்று திவான் சாமியார் வாய்விட்டுக் கூவிப் பெருங் கூச்சலிட்டுக் கதறி முறையிட, அப்பொழுது குருக்கள் கற்பூர ஹாரத்தியை ஏந்தி அழகாய்ச் சுழற்றினார்.

அதைக் கண்ட திவான் சாமியார் களிவெறியும் கட்டி லடங்கா ஆவேசமும் கொண்டு கன்னங்களில் அடித்துக் கொண்டு