பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஜனனி *** 23 குழந்தைக்கு ஒரு புருஷனைத் தேடிப் பிடித்துவிட்டேன்!” என்று பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டே ஐயர் வீட்டுள் நுழைந்தார். பையன் எங்கோ தூரதேசத்தில் ராணுவத்தில் வேலையிலிருந்தான். கல்யாணத்துக்கு முதல் நாள் மாலைதான் பையன் வீட்டார் வந்து இறங்கினார்கள். பிள்ளையைப் பார்த்தவர்கள் பிரமித்தே போய்விட்டார்கள். இன்னமும் சிலர் அதுயையால் வெடித்தே போனார்கள். "ஜனனி காத்திருந்தாலும் காத்திருந்தாள் அதிருஷ்டச் சீட்டு அடித்துவிட்டாள். பையன் சிவப்பிலேயும் சிவப்பு, செந்தாழைச் சிவப்பா ராஜா மாதிரி இருக்காண்டி!" “மணையிலே உட்கார்ந்தா, ரெண்டுபேருக்கும் ஜோடி கூட ஒட்டாதேடி!” “என்னடி பைத்தியம் மாதிரி பேசறே? பணம் ஒட்ட வைக்காத பண்டங்கூட உண்டா? இரண்டாயிரத்துக்கு நாலாயிரமாத் தளர்த்தினால், வஜ்ரம் மாதிரி ஒட்டிக்கிறது!” ஐயர் நாலுநாள் கல்யாணம் பண்ணி, பணத்தை வாரி இறைத்தார். சமையலுக்கோ சடங்குக்கோ உடையும் ஒவ்வொரு தேங்காயுடன் அம்மாளின் வசை வார்த்தைகளும் வெடித்தன. “இந்த பிராமணன் எந்தக்குடி பாழாப் போறதுன்னு நெனைச்சுண்டிருக்கான்? பிள்ளையில்லாச் சொத்தா இது?” அவள் வார்த்தையைச் சட்டை செய்வார் யார்? நான்கு நாள் கல்யாணத்திற்குப் பிறகு, ஐந்தாம் நாள் சாந்தி பண்ணி, பெண்ணைப் புக்ககத்துக்கு அனுப்புவதாக இருந்தது. ஆனால் மூன்றாம் நாள் இரவு மாப்பிள்ளைப் பையனுக்கு அவன் அதிகாரிகளிடமிருந்து, உடனே புறப்பட்டு வரும்படி ஒரு தந்தி வந்தது. பாலிகை கொட்டக்கூட நேர