உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

இப்படிப்பட்ட காலகட்டத்தில் நாம் கூடியிருக்கிறோம். (நீண்ட நேரம் கைதட்டல்)

"உலக முழுவதும் கம்யூனிஸம் அலைமேல் அலை மோதிக் கொண்டிருக்கிற காலத்தில், ஒலியும் எதிரொலியும் கிளப்பிக் கொண்டிருக்கிற காலத்தில் இங்கு நாம் கூடியிருக்கிறோம்.
3 கோடியே 30 லக்ஷம் படைவீரர்கள்
"எனக்கு முன் பேசிய எங்கள் மாகாணக் கட்சியின் தலைவர்

எம். ஆர். வெங்கட்ராமனும், தோழர் மோகனும் புதிய கேரளத் தைப்பற்றியும், அதன் வெற்றிச் சாதனைகளைப்பற்றியும் குறிப்பிட் டார்கள். அத்தகைய கேரளம் இன்று உலகத்துக்கே ஒரு புது அனுபவத்தைக் காட்டி வருகிறது.

"கேரள கம்யூனிஸ்ட் தலைவர் எம். என். கோவிந்தன் நாயர் மாஸ்கோவில் தோழர் குருஷ்சேவைச் சந்தித்தபொழுது, குருஷ்

சேவ், கோவிந்த நாயரின் கையைக் குலுக்கிக்கொண்டு, "உங்களைக் கடுமையான கடமை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது" என்று கூறினார். இவ்வாறு உலக முழுவதும் நிலை குத்திய கண்களோடு கேரளத்தில் என்ன நடக்கிறது என்று ஊன்றிக் கவனித்துக் கொண்டிருக்கும் விதத்தில், கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் ஜனநாய கத்தை நடத்திக் கொண்டிருக்கும் காலகட்டமிது. (கரகோஷம்)

தோழர்களே! இன்று அரசியல் பிரபஞ்சத்தின் மையம்

கம்யூனிஸத்தின் பக்கம் வந்துவிட்டது, காலம் நமக்கு அனுகூல மாக இருக்கிறது. கம்யூனிஸம் ஏகாதிபத்தியத்தைத் தோற்கடித்த கால கட்டத்தில், கம்யூனிஸத்தின் சாதனையான செயற்கைச் சந்திரனைப் பறக்கவிட்டு தலை நிமிர்ந்து நிற்கும் கால கட்டத்தில் நாம் கூடியிருக்கிறோம்.

"நான் ஆரம்பத்தில் கூறியவாறு, உலகத்தில் மூன்றிலொரு நிலப்பரப்பிலே, உலக மக்களில் ஐந்தில் இரு பங்கு மக்களுக்கு

நமது செங்கொடி ஆட்சிக் கொடியாக இருப்பதுடன், 3 கோடியே 30 லட்சம் கம்யூனிஸ்ட் அங்கத்தினர்கள் அணி வகுத்திருப்பதாக வும் குறிப்பிட்டேன்.

இந்த மகத்தான, பொழுதொரு வண்ணமாக, பிரம்மாண்ட

மாக வளர்ந்து வரும் இயக்கத்தின் ஒரு பகுதிதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. அதன் ஒரு பகுதிதான் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி. உலக முழுவதிலும் வீசும் வீச்சு இந்தியாவிலும் தமிழகத் திலும் வீசுகிறது. 70 ஆயிரம் அங்கத்தினர்களைக் கொண்டதாக இருந்த இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி 3 லட்சம் கொண்டதாகவும்,