பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7S ஜாதி ரோஜா

யிடம் காண்பித்தாள். கல்வி அமைச்சரின் தலைமையில் அந்தி நிலா பரிசு பெறப் போவதைப் பற்றிய செய்தி இருந்தது.

தாமரையின் மனம் அழுதது. அழ அழச் சொல்லுவார்கள் தம் மனிதர்; சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார்கள் மற்றவர்கள்.

சில நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த விளம்பர விசித்திரத் தைப் பற்றி-அழகியின் அத்தான் முரளியின் எதிர்பாராத சந்திப்பு குறித்து-அவளிடம் சொல்ல வேண்டுமென்று ஆணை பிறப்பித்தது தாமரையின் நெஞ்சு. ஐந்து நாட்களாக என் இதய அடிவாரத்தில் புதைந்துவிட்டிருக்கும் விஷயங்களை இப்போது எப்படிச் சொல் வது? ஊஹீம், கூடாது ; கூடவே கூடாது ; அழகேசனின் தந்திரங்களிலே இதுவும் ஒன்றாய்த்தான் இருக்கவேண்டும்; இல்லை ‘யின்றால், அழகேசன்,தலைமையில் எப்படி இலக்கிய விழா நடை ...இல்லை, அழகிதான் பரிசைப் பெறுவாளா ?...மேலும், “தமிழ்த்தொண்டு ஆசிரியர்தான் அழகியின் கதை முழுமையையும் அறிவாரே!...நான் ஒருத்தி குழம்புவதுடன் நிற்கட்டும்; பாவம், அத்தி பூத்த மாதிரி இப்போதுதான் அழகி சிரிக்கக் காண்கிறேன் நான்!...” ஒலிப்பதிவு செய்யப்பட்ட டேப் ரெகார்டர் விசை அழுத் தம் பெற்றதும், திரும்பவும் தன்னுடைய இதய ஒலியை அஞ்சல் செய்யுமல்லவா, அதுபோலத்தான் இப்போது தாமரையின் மனம் பேசியது. . . . . . . .

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் வாடை பிராட்வேயில்

சாப்பாட்டுக்கு அழைத்தாள் சுசீலா. உடனிருந்த தாமரையும் அழைக்கப்பட்டாள். இருவரும் சுசீலாவைப் பின் தொடர்ந்த போது, அழகி...” என்ற குரல் கேட்டது. -

அழகி மட்டுமல்ல, செந்தாமரையும் திரும்பினுள்.

அனுமதியின்றி உள்ளே பிரவேசிக்கக் கூடாது என்ற எச் சரிக்கைப் பலகையில் பார்வையை முளையடித்து விட்ட மாதிரி முரளி நின்று கொண்டிருந்தான். .

அழகி தன் அத்தானேயே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். சில மாதங்களுக்கு முன்னே நடந்த அந்தச் சந்திப்பை எண்ணிள்ை. கண்களில் எரிமலை வெடிக்க, சின்ம் தேக்கி அவனிடம் பேசின வார்த்தைகள் நினைவில் தல்ை தூக்கின.

முரளியின் விழிகளில் பனித்துளிகள் இடம் மாறித் தவித்தன. அழகி பெருமூச்செறிந்தாள். மேல்ச் சேலையைச் சரி செய்ய விரைந்தது வலது கை, பிறகு, செந்தாமரையைத் திரும்பிப் பார்த்

Hi, -- * ,