பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#53

3. எனக்கு நானே விடுகதை ஆனேன்.... !

அழகேசன் விலாசம் பங்களாவிற்குள் அந்தக் கார் நுழைக் தது; குழல் ஒலி கேட்டு வாசற் கதவுகளைத் திறந்த பணியாள், கேள்விக் குறியை நெற்றியின் வரம்பில் தேக்கியவாறு நின்று கொண்டிருந்தான். வேலைக்காரி வள்ளிதான் காரின் கதவுகளைத் திறந்து விட்டாள். அவளுக்கு உதடு கொள்ளாத சிரிப்பு: உள்ளம் கொள்ளாத மகிழ்ச்சி. இல்லற தெய்வத்தைத் தரிசித்துவிட்டாளல் லவா..?

அழகேசன் முன் கதவைத் திறந்துகொண்டு இறங்கின்ை. தன்னுடைய பங்களா அன்றைக்கு-அப்பொழுது அவனுக்குப் புதுமையைக் காட்டிக் கொண்டிருந்தது. எண்ணும் எண்ணத்தில் புதுமை ; கானும் காட்சியில் புதுமை, நோக்கும் பார்வையில் புதுமை, புதுமை அவனுள் ஒரு பகுதியாக மாறியது; அவன் புது மையினுள் ஒரு பகுதியாக மாறினன்.

இளந் தேனிலவு எங்கும் பொழிந்து கொண்டிருந்தது. ‘ஏ, வள்ளி கொஞ்சம் இப்படி வருகிருயா? அழகியை உள்ளே கூடத்துக்குக் கொண்டுபோக வேண்டும், ’’ என்றான் அழகேசன். -

உத்தரவு புறப்படுவதற்குமுன், அவளாகவே புறப்பட்டு வந்து தயாராக நின்று கொண்டிருந்தாள்.

கூடத்தில் இருந்த ஸ்பிரிங் கட்டிலில் பட்டு மெத்தையில் அழகி கிடத்தப்பட்டாள்.

அழகேசன் பெருமூச்சு விட்டவாறு, எங்களுடைய முதல் இரவுக்காக-சாந்தி முகூர்த்தத்துக்காகத் தயாரிக்கப்பட்டவை இந் தக் கட்டிலும் பட்டு மெத்தையும் அந்த முதல் இரவு என்றுதான் வருமோ?.மலர்ந்த ரோஜாவாக இனிய மணம் வீசி நிறைந்திருக்க வேண்டிய அழகியை வாடிய பூவாகக் கண்டு எடுத்து வந்து இப் போது மெத்தையில் கிடத்த வேண்டியிருக்கிறதே!...” என்று நின்ைத் தான். அவளுக்காக அனுதாபப்பட வேண்டிய அவன், தனக்காக அனுதாபப்படலானன். -

உலக உருண்டை அப்பொழுது அதிசயப் பெட்டிக்குள் சுழன்றது. ஆல் இண்டியா ரேடியோ-செய்திகள் வாசிப்பது பூர்ணம் விசுவநாதன் என்று பேசியது ரேடியோ. -