பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பும் ஞானி ஒரு பேய் சோவியத் பூமிதனில்-செஞ்சேனை சூழ்ந்திடும் பொன்னுலகில் தாவிக் குதித்தது பார்- நாஜிப்பேய் சாவை அழைத்தது பார்! வெற்றிவெறி ஒழிய - நாசிசத்தின் வீம்பு முற்றும் தொலைய குற்றுயிரும் குலைய- செஞ்சேனை குமுறிச் சாடுது பார் ! குள்ளப்பேய் சீனத்திலே -ஐந்தாண்டு கும்மாளம் போட்ட பின்னும் வெல்ல முடியவில்லை-ஐக்ய அணி வெல்லுது சீனத்திலே! சீனமும் சோவியத்தும்-உலகுக்கு சீரிய நம்பிக்கையாய் ஆனதின் றாதலினால்- பாசிசப்பேய் அழிவு திண்ணம் திண்ணம்! மாஜன மாபெரும்போர் - பார்முழுதும் வளரும் பான்மை கண்டால் பாசிசம் சாய்வதன்றி- புதுப்புவி பாங்காயெழும் உறுதி! செஞ்சேனை வெல்கவெல்க-வணங்காத சீனத்தின் வீரம் வெல்க! இந்திய-சீன ஐக்யம்-உலகுய்ய என்றும் நீடுழி வாழ்க!

140

140