பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலித் தலைவர்கள் வேஷதாரி வலை வீச்சை உதறியெறி - நேசமுடன் சமதரும நெறியாளர் போல் நடிப்பார்! நித்தமும் தொழிலாளர் தலைவர் பாடமும் படிப்பார்! தாசராகிப் பணக்காரர் தங்களைக் காக்காய்ப் பிடிப்பார்! சமயோசிதம் போலத்தான் சுயகார்யம் முடிப்பார்! தாமதமே இன்றித் தலைவர்களைத் தெரிவாய்! பூரணமாய் வேஷ தாரிகளை வெறுப்பாய்! (வேஷ) கமிட்டி கமிஷன்களில் கனம்பெறவே சென்றவர்! காரியத்துக் குதவாத சூரரென நின்றவர்! பொம்மலாட்டமே புரிந்து புகழ்விரும்பி வென்றவர்! போகமுறும் போது தொழிலாளிகள்யார் என்றவர்! - 87

(வேஷ)

87