________________
42 ஜெயகாந்தன் சிறுகதைகள் ஒற்றுமை இருந்தது. தந்தையின் அளவுக்கே உயரமிருந்தும் அவரைப் போல் சதைப் பற்றில்லாத அவனது உருவம் அவரை விடவும் நெடிதாய்த் தோன்றியது. அவன் தலை குனிந்து நடக்கையில் மணலில் அழுந்திப் புதையும் தனது பா தங்களையே பார்த்தான். மனசில் இருந்த கனம் விநாடி தோறும் மிகுந்தது; நெஞ்சில் குமுறுகிற ஆத்திரம் திடீரென்று தொண்டைக்கு வந்து அடைக்கிறது முகம் சிவந்து சிவந்து குழம்புகிறது. உதட்டை இறுக இறுகக் கடித்துக் கொள்கிறான்... அவன் தலை நிமிர்ந்து தூரத்துக் கடல் அலையை வெறித்தபோது அவனது கண் இமைகளின் இரண்டு கடைக் கோடியிலும் கலங்கிய கண்ணீர் வீசியடித்த காற்றால் சில்லென இமைக் கடையில் பரந்து படர்கிறது... அவர் அவனை மிகுந்த ஆதரவோடு பார்த்தார். ஒரு முறை செருமினார். அவன் அவரைத் திருமபிப் பார்த்தபோது அவனைச் சாந்தப்படுத்தும் தோரணையில் அவர் புன்முறுவல் செய்தார். அவனது உதடுகள் துடித்தன. " இங்கே உட்காரலாமா?" என்றார் அவர் அவன் பதில் சொல்லாமல் உட்கார்ந்து கொண்டான். ' எப்படி ஆரம்பிப்பது?' அவன் அவர் முகத்தை வெறித்துப் பார்ப்பதும், பின்னர் தவை குனிந்து யோசிப்பதும். மணவில் கிறுக்குவதுமாகக் கொஞ்சம் நேரத்தைக் கழித்தான்... அவன் எது குறித்துத் தன்னிடம் தனிமையில் பேச வந்திருக்கிறான் என்று சுந்தரம அறிந்தே வைத்திருந்தார். 'அந்த டெவிபோன கால்' சம்பவத்துக்குப் பிறகு இந்த ஒரு வாரமாய்த் தான் அவனைப் பார்க்கவேயில்லை என்ற பிரக்ஞை அவருக்கும் இருந்தது. எனினும் அவன் அதனால் பாதிக்கப்பட்டிருந்தும், வயது வந்த இளைஞன் எனற காரணத்தால் நாகரிகமாக அது விஷயமாய் ஒரு சந்திப்பைத் தவிர்த்து வருகிறான் என்று அவர் கருதி இருந்தார் ஆனால் இப்போது அது சம்பந்தமாய் அவன் மிகவும் ஆழமாகப் பாதிக்கப்பட்டு அது குறித்து தன்னிடம் பேசவே தயாராகி வந்திருக் கின்ற நிலைமை அவருக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றாலும், ஒரு கோழை போல் அந்தச் சந்திப்பைத் தவிர்க்க முயல்வது சரியல்ல என்பதனாலேயே அவனிடம் அவர் இப்போது எதிர்பட்டு நிற்கிறார்.