________________
44 ஜெயகாந்தன் சிறுகதைகள் நீ சொல்லு-நான் கேட்கிறேன்... உன் அம்மாவை இதில் கொண்டு வராதே! உன்னைவிட எனக்கு அவளைத் தெரியும். உனக்கு என்னைத் தெரிந்திருக்கிறதே, அதற்கு மேலாக அவளுக்கு என்னைத் தெரியும் - நாங்கள் இருபத்தைந்து வருஷங்கள் தாம்பத்தியம் நடத்தியவர்கள்; எங்கள் இறுதிக் காலம் வரை ஒன்றாக வாழ்க்கை நடத்துவோம்...நீ மேலே சொல்லு!" "நீங்கள் அம்மாவை வஞ்சித்து ஏமாற்றி ஒரு போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் ! நீங்கள் என்னை ஏமாற்ற முடியாது..." உன்னை ஏமாற்ற வேண்டிய அவசியமே எனக்கு இல்லை' என்பது போல் அவர் சிரித்துக்கொண்டார். "அந்த போன் நிகழ்ச்சியை மட்டும் வைத்து உங்களைப் பற்றி இந்த முடிவுக்கு நான் வந்துவிடவில்லை... இரண்டாவது முறை நீங்கள் போனில் பேசினீர்களே அந்தப் பேச்சை நான் கேட்டுக் கொண்டுதானிருந்தேன்... அதன பிறகு இரவு ஒன்பது மணிக்குமேல் காரை எடுத்துக்கொண்டு ஓடினீர்களே... உங்கள் இருவரையும் நான் தியேட்டரிலும் பார்த்தேன். இதனால் மட்டும ஒருவரை சந்தேகித்து விட முடியுமா ?... அதனால்தான் உங்கள் அறையில் புகுந்து உங்கள் மேஜை டிராயர், அலமாரி யாவறறையும் நான் சோதித்துப் பார்த்தேன்...உங்களின் காதல் கடிதங்கள் -ஒரு பைவே இருக்கிறதே ...அதில் ஒன்று இதோ!" என்று அவன ஆததிரத்துடன் பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அவர் மேல் விட்டெறிந்தான்... பிறகு அவன் வேறுபுறம் திரும்பிக் கொண்டு கண் கலங்கினான் தொண்டையில் அழுகை அடைத்தது கடற்கரைச் சாலையில் நீல விளக்குகள் எரிய ஆரமபித்தன மணல் வெளியில் ஜனக் கும்பல குழுமி இருந்தது...ஒரு சிறு கும்பல அவர்களை நோக்கி வத்து கொண்டிருந்தது அந்தக கும்பல் அவர்களைக் கடந்து செல்லும் வரை அவர்கள் மௌனமாக அமர்ந் திருந்தனர் பின்னர் வேணுதான் பேச்சை ஆரமபித்தான : நீஙகள் என்னைப் பெற்ற தகப்பன். உங்களுக்கு நான் இதை யெல்லாம் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டதை எண்ணினால் எனக்கு வருத்தமாகத்தானிருக்கிறது..- இனிமேலாவது நீங்கள் உங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்... அதற்காகத்தான் சொல்கிறேன்..."