பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 103

இருந்தால், அங்கே முரண்கள் தோன்றவே செய்யும் ; முரண்பாடுகளைத் தவிர்ப்பதில் தான் வாழ்க்கையின் பெருமை பேசப்படும் !- ஆகவே தான், முரண்பாடுகளே வாழ்க்கையாக ஆகி விட முடியாதென்றும் நான் அடிக்கடி நினைவு கூர் வேன் ; நினைவு படுத்துவேன்.

இங்கே, ரமியின் அழகான அன்பு நெஞ்சம் முரண் படுகிறது : பயங்கரமான, பண்பு மீறிய, அநாகரிகமான, துரோகம் நிறைந்த அந்த முரண்பாட்டில் அவளது உள்ளத்தின் அழகு களங்கமடைந்தாலும், தோன்றின சடுதியிலேயே அந்த முரண் விலகும்போது, அல்லது, விலக்கப்படும்போது, அவளது உள்ளத்தின் பழைய அழகு புத்துயிர் பெறத் தொடங்கி விடுகிறது : புனர் ஜன்மம் எடுக்கவும் தலைப்படுகிறது :- இங்கே தான் புஷ்பா தங்கத்துரை, அசல் பூர் வேணுகோபாலன் ஆகி பளிச்சிடு கிறார் - தப்பிப் பிறந்தாற் போன்று, நல்ல காரியம் ஒன்றைச் செய்து விட்டீர்கள். மிஸ்டர் பூர் வேணு கோபால் - ரமியைச் சியாமிடம் மறுபடி சேர்ப்பித்து விடடீர்கள் : - Sabash ! உங்கள் திருக்கூட்டத்திலே, உங்கட்காவது, கடைசிப்பட்சமான இந்த ஒரு சந்தர்ப்பத் திலாவது, தமிழ் ரத்தம் உறைந்திருக்கிறது! - நல்ல காலம், தப்பித்தீர்கள், என் பேனாவிடமிருந்து

“இரண்டாவது கண்ணகி'யின் நகல் :

சமூகக் குற்றவாளிக் கூண்டு உங்களையும் விட்டு வைக்கவில்லை - அதற்குக் காரணம் உங்கள் ஸ்வப்நா!கண்ணியம் சோறு போடாது என்பதாக நம்பும் ஸ்வப்நா மாதிரிதான் நீங்கள் - உங்கள் சொந்தச் சித்தாந்ததுக்கு உகந்த இடம் இந்தத் தமிழ் மண் அல்ல தான் !

சகோதரி-சகோதரர் புஷ்பா தங்கத்துர்ை அவர் களே - இப்போது, நீங்கள் என் முன் ஒரு கைதி -