பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

எனவும், அணையாத ஒளி ஆகவும் அவரது பணிகள் தொடர்வதும், தொடர் சேர்ப்பதும் சமூகநல வாழ்வுக்கு இன்றியமையாதது. -

ஆச்சரியக் குறியிலே புவனாவை விளையாடச் செய்த புனை கதை ஆசிரியர், இங்கே, கேள்விக் குறியில் ருக்மிணியை விளையாட்டுக் காட்டச் செய்துள்ளார்.

திருச்சியில் திருவானைக் கோயிலின் முன் கோபுர வாசலைத் தாண்டியுள்ள பரந்த புல்வெளியில் வழி பாட்டை முடித்துக் கொண்டு ருக்மிணியும் ஜெயந்தியும் பேசியபடி அமர்ந்திருக்கையில், ஜெயந்தி ஆரம்பிக் கிறாள் :

“உன்னைப் பற்றிப் பலவாறு நான் வெளிலே பேசினது உண்டு. அலமுவை நீதான் கொன்னேன்னு கூடச் சொன்னேன். ஏதோ ஒரு வேகம். எங்கே என் வாழ்வை உன்னுடைய குறுக்கீடு பாதிக்குமோ என்கிற பயம். எல்லாப் பெண்களுக்கும் உண்டான இயல்பான கோபம் தானே ? உனக்குப் பைத்தியம் ஏன் தெளிந்தது என்று கூடப் பொறாமைப்பட்டதும் வாஸ்தவம்தான். தயவு செய்து எல்லாவற்றையும் மறந்துவிட்டு, எங் களுடன் நீயும் வரவேண்டும். உன்னைப் பற்றிப் பரிபூரணமாக அறியாமல், நான் உன் மேல் கொண் டிருந்த அனுமானங்கள் எல்லாவற்றையும் உன் சிறந்த குண்ங்கள், செயல்கள் போக்கி விட்டன. உன்னுடன் என் வாழ்வின் செளபாக்கியத்தைப் பகிர்ந்து கொண்டு வாழ்வதில் எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. நான் ஒருத்திதான் இது நாள் வரை தடையாக நின் றேன். இப்பொழுது, இதே ஜம்புலிங்கேசுவரரின் கோபுர நிழலில் உட்கார்ந்து கொண்டு கூறுகிறேன். இனி நானும் தடையாக இருக்க மாட்டேன். என் வேண்டு கேள்ளைத் தயவு செய்து ஏற்க வேண்டும்! “

ருக்மிணி வானளாவி நின்ற கோபுரத்தை நிமிர்ந்து பார்க்கிறாள். “உன்னுடைய தெளிவைப் பார்த்து நான்