பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 167

உள் மனம் உள்ளது உள்ளபடி பேசவும் தலைப்படுகிறது. மன உணர்வுகளின் ஆட்டத்தில், அவளுடைய கதையின் அந்தரங்கமான முன்பின் கதைச் சிதறல்கள் சித்திச் சிதறவும் ஆரம்பித்து விடுகின்றன!-ஆகவேதான் விஜியின் குணச்சித்திரப் படையலும் படப்பிடிப்பும் இயற்கையாகவும் தத்ரூபமாகவும் அமைந்து விடவும் செய்கின்றன !-பால குமாரனின் புதுமையான சமுதாயப் பார்வையில் புரட்சிகரமான விழிப்புணர்வை ஏற்படுத் தவம் இந்த விஜிதான் ஆதி காரணமாக ஆகிவிடுகிறாள் என்னும் யதார்த்தமான நடப்பை நாம் மறப்பதற் கில்லை; மறுப்பதற்கில்லை !

விஜயலக்டிமி புதுமையான பெண்தான் ! புரட்சிமிக்க தமிழ்ப் பெண்தான் !-ஆனாலும், பலமும் பலவீனமும் கொண்ட சராசரியான பெண்! ஆகவேதான், அவளையும் ஆசாபாசங்கள் ஆட்டிப் படைத்து அலைக்கழிக்கவும் செய்து விடுகின்றன!-நெஞ்சை ஒளித்து வஞ்சகமில்லை என்போம்: அவள் தன் சம்பந்தப்பட்ட எதையும் ஒளிக்க வில்லை, மறைக்கவில்லை. ஆகவேதான், அவளால் புதுமையான, அதிசயமான, வேடிக்கையான பெண்ணாக நம் முன்னே அழகு காட்டி. ஆடிப்பாடி ஆரவாரம் செய்யவும், சிரித்து மகிழ்ந்து சீரழியவும், அழுது புலம்பி உருக்குலையவும், முடிந்திருக்கிறது! ஒளிந்து கொள்ளத் தான் இந்த மார்பும் மனிதரும்'-எவ்வளவு துணிச்சல் காரியாக இருக்கிறாள், பொல்லாத்தனம் கொண்ட இந்த விஜி ! பாவம் !

பாவங்கள் இல்லையேல். புண்ணியம் இல்லை !

அமரகவி வரம்புறுத்த புதுமைப் பெண்ணாக விளங்கக்கூடிய புண்ணியத்தைச் செய்திடவில்லை இந்த விஜயலக்ஷ்மி என்பது அங்கீகரிக்கப்பட்டதும் பிரகடனப் படுத்தப்பட்டதுமான உண்மைதான் 1-ஆனாலுங்கூட, அவளும் இந்தத் தமிழ்ச் சாதி சமூகத்தின் ஓர் அங்கமாகி, ஒரு சமூகப் பொறுப்பின் உந்துதலின் பேரில், தன்னைத்