பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 169

பவித்திரமானதும் ஆதரிசனமானதும், நிதர்சன மானதும் ஆத்மார்த்தமானதுமான உயிர்ச்சாட்சியமாக விளங்கிக் கொண்டிருக்கின்ற அந்தக் குத்து விளக்கின்

தீபச்சுடர் உலகத்தைப் போலவும், மனிதர்களைப் போலவும் மாற மாற, விஜியின் நிலையான உடம்பும் நிலையற்ற மனமும் மாறுகின்றன ;

மாறிக் கொண்டிருக்கின்றன. நேற்றைய விஜி வேறு; இன்றைய விஜி வேறு ! இதில், நிஜமான விஜய லக்சமி எது ?... தெரியாது !.-மனத்தின் மனம் சட்டை உரித்துக் கொண்ட நாகமெனச் சீறத் தலைப்படுகிறது: நேத்திக்கு நாலு பேரோடே படுத்திண்டியே? இன்னிக்குக் குத்து விளக்குப் பூஜை பண்றயே ?’ என்று என்னை நானே கேட்டுக் கொள்ள முடியாது. இன்று உள்ளபடியே, என்றைக்கும் இருப்பேனென்று சொல்லவும் முடியாது. மாறுதல் இயற்கை; மாறுதல்தான் உலகம். ஆனால், மாறாமல் இரு என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். பொருள் என்று ஏதுமில்லை... மாறுதலே பொருள் என்றால்- ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...மாறுதலே சாசுவதமென்றால், எதிர்காலப் பயம் போய் விடாதா?... நேற்றையத் தினத்துடன் இன்றைத் தினத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் தானே நல்லதும் கெட்டதும் புரிகின்றன?...’ ‘நமஹ ... நமஹ’ என்கிற சொல் வரும்போதெல்லாம் குங்குமம் போட்டவள், கல்பாவுக்குச் சாமி வரவே, அவள் செய்கைகள் தடைப்படுகின்றன.- மாறும் மனிதர் மீது, உலகம் மீது நம்பிக்கையோ, அவநம்பிக்கையோ இல்லாத நிலையிலே, கடவுள் வழிபாடு, குத்துவிளக்குப் பூஜை எதற்கு ?’... -

“நீ கல்யாணத்துக்குச் சரின்னு சொன்னவுடனே, எனக்குத் தூக்கம் வந்துடுத்து; எனக்குச் சந்தோஷமா இருந்தாக் கூட தூக்கம் வந்துடும்,” என்று விஜியிடம் வெள்ளை மனத்துடன் அறிவித்த ரங்கா, “என்ன, பூஜை முடிச்சாச்சா?” என்று கேட்டபடி, கதவைத் திறக்கிறார்: