பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை




பிரபுவிடம் கழுத்தை நீட்டி, அந்தக் கழுத்தில் மூன்று முடிச்சுக்களை ஏந்திக்கொண்ட ஏந்திழை பத்மா ; அதாவது மஞ்சு என்கிற செல்வக் குமரியின்- கங்காவின் வயதை ஒத்த வாலைக் குமரியின் அம்மா, அவள் சொல்வாள் : “இன்னிக்கு மத்தியானம் தியேட்டரிலே கங்காவைப் பார்த்தேன். என்னாங்க, ஆளே மாறிடிச்சு அந்தப் பொண்ணு ? என்னை அதுக்கு அடையாளம் தெரியலே போல இருக்குது. கூட, எவளோ ஒரு சட்டக்காரிச்சி. இப்ப நீங்க கங்காவைப் பார்க்கிறதில்லையா ? எனக்கு என்னவோ பாவமா இருந்திச்சுங்க. சரி, அது நம்மைக் கண்டுக்கலே நாம்ப அதை என்னாத்துக்குக் கண்டுக்கணும்?’னு வந்திட்டேன். எனக்குத்தோணுது...” என்று அவள், அதாகப்பட்டது பத்மா. அதாகப்பட்டது, திருமதி பிரபு மேற்கொண்டு என்னவோ சொல்ல ஆரம்பிக்கும்போது, பிரபு அவளை அதாவது, அவன் திருப்பூட்டின பத்தினியைக் கோபமாக முறைத்துப் பார்க்கிறான். .

“எவ எப்படிப் போனா, எனக்கென்னா ? டோன்ட் ஸ்பாயில் மை ஈவினிங்..” .

பிரபு கத்துகிறான் ; சாமானியமாகக் கத்தவில்லை : கோபமாகக் கத்துகிறான்; கோபாவேசமாகவும் கத்துகிறான்.

சும்மா சொல்லக் கூடாது.

பிரபு என்றால் பிரபு'தான்.

பின், இந்தப் பிரபு அந்தக் கங்காவாக ஆகமுடியுமா என்ன ?.

பிரபுவுக்கு அந்தி மாலை நேரங்கள் என்றால், உயிரும் பிராணனும் அதனால்தான் போலும், மாலைப் பொழுதுகளை ஸ்பாயில் செய்ய அந்நியரை அவன் அனுமதிப்பது கிடையாது !-ஆனால், இவன் மட்டும் ஒரு மாலைப் பொழுதை ‘ஸ்பாயில்’ செய்ததோடு நிற்காமல்,