பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



‘அம்மன் சிலை மாதிரி சின்ன உருவம் கொண்ட பெரிய பெண் கங்கா. கல்லூரி மாணவி ஆயிற்றே ? ஆகவே, கல்லூரிக்கு எதிர்ப் புறத்தில் கொட்டும் மழையில், இருள் கொட்டும் நேரத்தில், பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறாள். அப்போது, கப்பல் மாதிரியான காரொன்று அவளது வழியின் குறுக்கே நிற்கிறது. காரை ஒட்டிவந்த இளைஞன் ஒருவன் வசீகரம் மிகுந்த புன்னகையோடு, “ப்ளீஸ் கெட் இன்.” என்று ஏறச் சொல்லி, அவள் போக வேண்டிய இடத்தில் இறக்கி விடுவதாகச் சொல்கிறான். அவள் நன்றி கூறி, மழை விட்டதும் பஸ்ளில் போய்க் கொள்வதாகக் கூறுகிறாள், அவனோ. கொட்டும் மழையில் தயங்கி நிற்கும் அவளைக் கையைப் பற்றி இழுக்காத குறையாக வண்டியில் ஏறும்படி அவசரப்படுத்துகிறான். இப்போது. அவனது அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லை. வண்டியில் ஏறுகிறாள். தரித்திரம் பிடித்த தாவணியின் தலைப்பைப் பிழியும்போது. அவன் நீட்டிய துருக்கித் தேங்காய்ப் பூத்துவாலையின் வாசனையில் முகத்தைச் சுகமாகப் புகைத்துக் கொள்கிறாள்.

“நகரத்தின் சந்தடி அடங்கிப் போன ஏதோ ஒரு பெரிய சாலையில் கார் போய்க் கொண்டிருக்கிறது.

வானம் கிழிந்து அறுபடுகிறது : மின்னல்கள் சிதறித் தெறிக்கின்றன ; எங்கோ இடி வெடிக்கிறது; அந்த இடி அவள் தலையில் விழுகிறது!

‘யாரென்றே தெரியாத ஒருவனுக்கு அவ்வளவு சுலபமாக அவளால் இணங்க முடிந்ததன் பலாபலன்கள் வீட்டின் தலை வாசலில் காத்துத் தவம் கிடக்கின்றன. அண்ணா அவளைக்