பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை


கங்கா - பாவம், பாவப்பட்ட பிறவி !

கங்கா !

பரிதாபமே !.

பாவம் !...

பாவப்பட்ட ஜன்மம் !

அதனால்தானோ என்னவோ, சில நேரங்களில் சில மனிதர்கள் அவளை- கங்காவை அருமை பெருமை வாய்ந்த நமது தமிழ்ச் சமுதாயத்தின் முன்னே முதல் குற்றவாளியாக, ஏன், முதல் தரக் குற்றவாளியாகவும் நிறுத்தி வைத்து விட்டது போலும் !

தாய்ப் பாரதத்தின் தமிழச்சாதியிலே, பண்பாடும் பண்பாட்டுப் பெருமையும் லயம் சேர்க்கும் பாரம்பரியப் பெருமிதமும் பூண்ட வீரத் தமிழச்சியின் வழி வந்த கங்கா, வழி தவறி, கற்பு நிலை தவறி, கெட்டு அலைகிறாள் ; சீரழிகிறாள். தமிழ்ச் சமுதாயத்தின் சீருக்கும் சிறப்புக்கும் உதாரணமாகி, உதாரணம் தரவும் கடமைப்பட்டவள், தான் களங்கப்பட்டு அதாவது, தன்னைக் களங்கப் படுத்திக் கொண்டு, அத்தோடு நிற்காமல், தான் சார்ந்த இந்தச் சமுதாயம் களங்கப்படவும் களங்கமடையவும் ஏது வாகிறாள் ; பின் அவளாகவே, குற்றக் கூண்டிலும் ஏறி விடுகிறாள் ! .

திறந்த புத்தகம் இதோ, காற்றில் பறக்கிறது :

இந்தக் கங்கா, அந்தப் பிரபுவை இரண்டாவது தடவையாகச் சந்திக்கப் போகின்றாள் : பன்னெண்டு வருஷத்துக்கு முந்தி அவனை முதல் தடவை சத்திச்சப்பறம் அந்தச்சந்திப்பின் பலனை இந்த நிமிஷம் வரைக்கும் நான் அனுபவிச்சுண்டு இருக்கேன். அவனை மட்டும் அப்போ நான் சந்திக்காமல் இருந்திருந்தால் ?... அந்தக் கார்லே நான் ஏறாமல் இருந்திருந்தால் ?... அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் பணியாமல் இருந்திருந்தால் ?... அசடாட்டமா அழுதுண்டே வந்து அம்மாகிட்டே