பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை




உருவான ஒரு பாத்திரம் இங்கே இப்படித் தான் நடந்து கொள்ளுமென்றும் கங்காவின் உருக்காட்டுப் படலத்தை சமர்த்தாகவும் சமத்காரமாகவும் நியாயப்படுத்தும் நேரத்தில் மேலும் இவ்வாறாக விளம்புவார் : “...சமூக விதிகளை மறுப்பதும் மாற்றுவதும் அதன் அநியாயமான தீர்ப்புக்களைக் காலத்தின் முன்னே மறுபரிசீலனைக்கு வைப்பதும் இலக்கியத்தின் பணி ஆகிறது. எனவே தான், இலக்கியத்தில் ஜனநாயக தர்மம் அனுமதிக்கப்படுவதில்லை. முரண்படுவதற்குச் சம்மதம் அளிக்கிற பண்பு தான் இலக்கியப் பணியாகும். எந்தச் சமூகம் இலக்கியத்திலும் இந்தப் பண்பை அனுமதிக்காதோ, அது அழிந்து படும் ! அது அறிவுலகப் பிரஜைகளின் நரகமாயிருக்கும் ! ... இந்தச் சமூக அநீதிகளுக்கும், நிகழ்கால வெறுப்பு விருப்புகளுக்கும், பெரும்பான்மையினருக்கும் வளைந்து கொடுத்துச் செயல்படும்படி இலக்கிய ஆசிரியனை நிர்ப்பந்திப்பது காலத்துக்கும் சரித்திரத்துக்கும் இழைக்கிற அநீதியாகும் ! அப்படி நிகழ்வதைக் கருத்துலகச் சர்வாதிகாரம் என்றும், சிந்தனைச் சுதந்திரத்தைப் பறி முதல் செய்வது என்றும் அறிவுலகம் கூக்குரலிடுகிறது!...”

நடைமுறை வாழ்க்கையிலே, மனிதத் தன்மை மற்றும் மனிதாபிமானம் போன்ற மனப்பாக்கியங்களின் ஆதாரத்தோடு, உணர்ச்சி பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் இலக்கிய ஆசிரியரான ஜெயகாந்தனைச் சுண்டிப்பார்த்து கங்காவைக் கவைக்கு உதவாமல், சுவைக்கும் உதவாமல், வேசித்தனமாகவும் அசிங்கமாகவும் முரண்படச்செய்து, அந்தப் பாவத்தையும் பழியையும் அவள் சார்ந்த இந்தச் சமூகத்தின் தலையில் போட்டு விட்டு, ‘ஹாயாக வசனம் பேசித் தப்பித்து விட்ட அவரது நாணயமான எழுத்துப் பணி செல்லுமா, செல்லுபடியாகுமா என்று சோதிப்பு நடத்தும் பொழுது, அவர் ‘கெட்இன்’ பிரச்னை வாயிலாகக் கங்காவைப்படுபாதாளச் சாக்கடையில் தள்ளி விட்ட அவரது எழுத்துச் சேவை- எழுத்துச் சேவகம் என்கிற நாணயம் கள்ளப்பணம் போலே- கள்ளச்