பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 63



இந்த அனுதாபம் தான் கதையின் பிரதான பாத்திரம். அனுதாபத்தின் இரு வேறு கிளைகள்தாம் அகல்யாவும் கனகலிங்கமும்.

அகல்யாவின் துயரக் கதையைக் கேட்டு வருந்தும் கனகலிங்கம் அவள் பேரில் அனுதாபம் கொண்டு, அதன் விளைபயனாக, ந ம் மு டை ய அனுதாபத்தையும் சுவீகரித்துக்கொளள முயன்றான். அவன் ‘உத்தமன்’ !’

கற்பனை மெருகிழந்த தன் துயரப் பெருங்கதையைச் சொன்ன அகல்யாவுக்கு வாழ ஆசை துடிக்கிறது. எனவே கனகலிங்கத்தையே தன்னுடைய உயிர்ப்பிடிப்பாகப் பற்றக் கனவு காண்கிறாள். ஆகவே சொர்க்கமெனவும் மகிழ்கிறாள். சமுதாயத்தின் அனுதாபத்தை அடைய வேண்டுமென்பதற்காகச் சாக விரும்பாத அவள் தசரத குமாரனாலும் கைவிடப்பட்டு நடுத் தெருவிலே நிற்கும் நிலையில், அடகடவுளே! ‘பாலும் பாவையும் ஒன்றென்று எண்ணியா நீ என்னைப் படைத்தாய்?’ என்று நெட்டுயிர்க்கின்றாள், அடுத்த கணம், ‘யார் இடம் அளிக்கா விட்டாலும், இந்த உலகத்தைவிட இரண்டு பங்கு பெரிதான கடல் கூடவா நமக்கு இடமளிக்காது ?’ என்ற ‘ஞானம்’ அவள் உள்ளத்தில் பளிச்சிடுகிறது. ஒரு முறை இந்திரனுடைய அன்புக்குப் பாத்திரமான அகல்யா, இப்போது கடலின் அன்புக்கும் பாத்திரமாகி விடுகிறாள்.

கதை மிகச் சிறிது. ஆனால் உலகமோ மிகப்பெரிது. அதனால்தான் இந்தப்பரந்த உலகத்திலே இந்தச் சின்னக் கதை பலருடைய நினைவுப் பொருளாக இன்னமும் காட்சி கொடுத்துக் கொண்டு வருகிறது. நன்றாக நடந்து வந்த ஒருத்தி வழுக்கி விழுந்து விடுகிறாள் இந்திரன் நல்லவன் அல்லன் என்றாலும், கெட்டிக்காரன். ஊரைச் சுற்றுவதற்கு உதவும் ‘லைசென்ஸாக’வும் ‘பர்மிட்’டாகவும் தரிசனம் தர அவள் கழுத்தில் தாலியை கட்டினான் ; குறிக்கோளை முடித்துக் கொண்டான். ஆனால் அப்போது