பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை :

 

தோரண வாசல் :

 
படைப்பின் விளையாடலில் மானுடம் :

டைப்புச் சக்தியின் புதிர் விளையாட்டில், சோதனைப் பண்பின் விதியாக அமைந்த வாழ்க்கை என்னும் கூத்து அரங்கத்திலே, அரிதான-மிகவும் அரியதான மானுடப்பிறவி என்பது கிடைத்தற்கரியதும் பெறற்கரியதுமான ஓர் அருமையான நல்வாய்ப்பாகவே அமைகிறது; அமைக்கப்படுகிறது !

வாழ்க்கை என்னும் படியான ஆடுகளம், மனிதனுக்குக் கிடைத்துவிட்டால், பின், அவன் தனக்கு வாய்ப்பாகக் கிட்டிய நாடக மேடையிலே ஆடாமல், கூத்து ஆடாமல், கூத்தாடாமல் என்ன செய்வான், பாவம் ? இவ்வாறு மனிதன் ஆடும் போது சிருஷ்டியின் சூத்திரக் கயிறு அவனைச் சுற்றி விதியாகப் பின்னி, வினையாகப் பிணைந்து அவனை ஆட்டுவிக்கும் ரகசியத்தை அவன் அறிவது கிடையாது ; அவனால் அறிந்திடவும் முடிவ. தில்லை !-ஏன், தெரிகிறதா?- அதுதான் படைப்பின் ரகசியம்!-அதுவேதான் படைப்பின் புதிருங்கூட !