பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 73



நளினியைப் பற்றி இப்போது முன்னுரை எழுதும் போது பேஷ் !தேவலையே ! ஒரு சிறு விஷயத்தை வெகு அழகாக எழுதிவிட்டோமே ?’ என்று குதிக்கிறார். குதிக்கிறார். “நல்ல பேஷ் ! போங்கள், மிஸ்டர் கே. என். எஸ் !”

ஒரு சிறு விஷயம் !- அந்தச் சிறு விஷயமும் இல்லையென்றால், இதைப்படித்துத் தீர்க்கவேண்டுமென்று எனக்குத் தலைவிதியா, என்ன ? வயதால் மட்டும் வளர்ச்சியடையாமல் உள்ளத்தாலும் வளர்கின்ற பக்குவத்தை—மனத்திட்டத்தை- நளினி மூலம் பரிசோதனை செய்து பார்த்தார் க.நா.சு. விளைபலன் : தோல்வி படுதோல்வி!

சூள் !

வாசகர்களின் மனோதர்மத்துக்குக் கதையின் முடிவைக் காணிக்கை வைத்துவிட்டு எழுத்தாளன் விலகி நிற்பது புதிய உத்தி தான் ; கோடிட்டு, ‘கோடி’ காட்டும் உட்குறிப்பு (Subtle Suggestion) இது இத்தகைய முடிவுக்கு ஒர் தொடக்கம், வளர்ச்சி, இடைநிலை, கதை பிண்ட த்தில் ஒர் அழுத்தம், உருவாக்கும் தலைமை கதாபாத்திரங்ககளிலே ஒரு தனித்தன்மை போன்ற பண்புகள் பொலிவு காட்டவேண்டும். ‘நளினி'யில் நளினியைத் தவிர, மற்ற எல்லா பாத்திரங்களும் வெறும் அண்டா, குண்டான், குடம் வகையறாத்தான் ! பத்து வயசுப் பெதும்பைப் புருவத்தில் நளினி அழகு காட்டுகிறாள். திடீரென்று பதினைந்து ஆகிறது; வயசில் சின்னம்மாவுக்கும் சாஸ்திரிகளுக்குமே தகராறு. எப்படியோ, அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. போலி மனிதனாக ஆக்கி விட்ட சீதாராமனிடம் எப்படித்தான் நளினியை ஒப்படைக்கத் துணிந்தாரோ நம் கா. நா. சு...?

சீதாராமன் நல்லவனோ, கெட்டவனோ, நாம் அறியோம் பராபரமே ! அது க. நா. சு. அவர்களின் பேனா வுக்குத்தான் வெளிச்சம். ஆனால், நளினி தன் வாயால், “அவர் வண்டியிலேருந்து வந்து இறங்கச்சே தான்.