பக்கம்:ஜெயரங்கன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிகால விந்தையோ?

தல்லவா? இவ்வளவும் அந்த பாலாங்கன் பயல் கொடுத்த தைரியத் தாலல்லவா உனக்கு வந்தது. நல்லது “சடையைப் பிடித்து இழுத் தால் ஆண்டிதாளுய் வருகிருன்” என்பதைப் போல் அந்தத் தடிப் பயலை இல்லாமற் செய்து விட்டால் அப்போது என்ன செய்வாய்?

ஜெயலக்ஷிமி:-ஆ. ஹா என்ன சொன்னீர்கள்? அவரை இல் லாமலா செய்து விடப் போகிறீர்கள் தங்கள் யாரைக் காப்பாற்ற இருக்கிறீர்கள் அவரை இல்லாமற் செய்வதற்கு முன்னல் தங்களை இல்லாதபடி செய்து விட்டால் என்ன தோஷம்:

என்றாள். அப்போது ‘அம்மா என்ன வார்த்தை சொல்லு கிறீர்கள் காக்காவை அப்படிச் சொல்லலாமா? கோபத்தின் பேரில் அவர்கள் ஏதோ சொன்னுல் நீ அவ்வாறு சொல்லலாமா?” என்று அதட்டியபடியே காத்திமதிய பிள்ளே வந்தார். சீனிவாசலு ராஜ ஜெயலகதிமியை அடிப்பதற்காகப் பாய்ந்தார். காந்திமதியா பிள்ளை கண் ஜாடை காட்டவே ஜெயலகதிமி வெளியே ஒடி கதவை சாத்திக் கொண்டாள். இன்னெரு பக்கத்திலிருந்து ஆரீனிவாசலு ாாஜூவுக்குப் படுக்கைப்போட சொள்ளமாடத்தேவன் வந்தான். அவனும் எல்லாவற்றையும் பார்த்தும், கேட்டும், பிரமித்து கின்ற விட்டான். ரீனிவாசலு ராஜு பேச மாட்டாரென அறிந்த காந்தி மதியா பிள்ளை ஜாடையாய் வெளியே போய் விட்டார். சொள்ள மாடத்தேவனும் படுக்கையைப் போட்டு விட்டு வெளியே போய் விட்டான். - மேற்சொன்ன விஷயங்கள் கடக்ேதறிய சுமார் 2 மணி கோங் களுக்கப்பால் காந்திமதியா பிள்ளை அவ்வூர் கிராம முனிசிப்பையும் தனவந்தரும் பண்லேவா தேவிக்காாருமான ஷேக் முஸ்தபாாாவுத் தரையும் அழைத்துக் கொண்டு வந்து நீனிவாசலு ராஜு படிப்பு அறையின் பக்கமாய் வந்தார். அப்போது ஜெயலகசிமி ஸ்ரீனிவாசலு ராஜாவின் படிப்பு அறையின் வெளியில் வத்து கொண்டிருக்காள் எதிரில் வந்த காந்திமதியா பிள்ளை அவளைக் கண்டதும் ஜெயலகதிமி ஏதோ ஒரு வஸ்துவை மறைத்து மடியில் வைத்தாள். அப்போது, காந்திமதி:-அம்மா! காத்தா அவர்கள் என்ன செய்கிருள்கள்? ஜெயலக்ஷிமி-யார் தாத்தாவா? என்ன செய்கிறார்களோ தெரி யாது”

காந்திமதி:-என்னம்மா! அந்த அறையிலிருந்துதான் வரு கிறாய் தாக்கா அவர்கள் என்ன செய்கிறார்களென்று தெரியாதென் கிருயே!

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/126&oldid=632984" இலிருந்து மீள்விக்கப்பட்டது