ç> - . H = _ட o === Wy நெகவேவி- : - - _ === - கண்டர்களுக்கு இந்தப் புத்தகத்திலுள்ள ஐந்து கட்டுரைகளும் வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்டவை. எனினும், இவை களுக்குள் கெருங்கிய தொடர்பு உண்டு. இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களில் சில மிகவும் புரட்சிகரமானவை என்று யாரும் அஞ்ச வேண்டிய தில்லை. ஏனெனில், இவைகளைப் பார்க்கிலும் புரட்சிகர மான கருத்துக்களே உடையவர்கள் பலர் இருக்கின்றனர். புரட்சி என்பதுதான் என்ன ? வளர்ச்சி ஆமை வேகத் தில் ஊர ஆரம்பித்தால், உடனே புரட்சி தோன்ருமல் முடியாது. புரட்சி என்பது , ஜதி, வளர்ச்சி என்பது நடனம். புரட்சிகள் ஆகிய பல இதிகள் சேர்ந்து வளர்ச்சி என்ற கடனமாகப் பூர்த்தியாகின்றன. சொற்கள் பூதங்களாம். அவைகள் மனித ரத்தத் தைக் குடித்த பிறகே அரிய பெரிய காரியங்களே எல்லாம் சாதிக்க முடியுமாம். என்னுடைய சொற்கள் சம்பந்தமாக உண்மையைச் சொல்லிவிடுகிறேன். இவைகள் பல வருஷங்களாக உள்ளத்தில் கிடந்து என் உதிரத்தைக் குடித்து வந்தன என்பதில் ஐயமில்லை. ஆனால், கிடைக்கிற வரையில் குடித்துவிட்டு, இப்பொழுது கான் ஏவிய வேலைகளே இவைகள் சாதிக்குமோ என்னவோ, தெரியவில்லே. அதைப்பற்றி எனக்கு கவலையும் இல்லே. இனி அது ங்ேகளும் என் சொற்களும் சம்பந்தப்பட்ட விஷயம். A.
பக்கம்:ஜெயில்.pdf/6
Appearance