பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" _

பதிப்புரை

அன்பும், பண்பும், அறிவும், நிறைந்த ஒர் அற்புதமான வீரமாணவனைப் பற்றிச் சித்தரிக்கும் அருமையான நாவல் இது.

சங்கர் ஓர் இலவசப் பள்ளியில் படிக்கும் மாணவன். அந்த ஊரில் உள்ள ஒரு ரெளடியின் துணையோடு அக்கிரமங் கள் பல புரியும் சமூகப் பிரமுகர் ஒருவரின் சுய உருவத்தை வெளிப்படுத்தி நீதியின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தி வெற்றி கொள்கிறான்.

இந் நூலை எழுதிய ஆசிரியர், குழந் தைகளுக்காக பல நாவல்கள் எழுதிப் புகழ் .ெ ப ற் ற வ ர். அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதி 1978ல் குழந் தை எழுத்தாளர் சங்கம் நடத்திய இலக் கியப் போட்டியில் ஏ.வி.எம். 'மின் அறக் கட்டளை முதல் பரிசான தங்கப் பதக்கத் தையும்; 1988ல் எழுதிய தென்னை மரத் தீவினிலே’’, என்னும் சிறுவர் நாவலுக்காக 'ஏ. வி. எம்2 மின் வெள்ளிப் பதக்கத் தையும் பரிசாகப் பெற்றவர்.

சிறுவர்களிடையே நல்ல வரவேற்பைப்

பெறும் இவரது இந்த அருமையான நாவலை எங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ஜானகி நீலமணி