பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 275 கச்சித் திருமேற்றளிக்கு வருகின்றார் கழுமல வேந்தர். இரண்டு சந்நிதிகளையும் வழிபடுகின்றார் (பதிகம் இல்லை). காஞ்சியிலிருந்து மாற்பேறு" என்ற திருத்தலத்திற்கு ஏகுகின்றார். இரண்டு திருப்பதிகங்களால் வழிபடுகின்றார், *ஊறியார் தரு (1.55) என்பது முதற் பதிகம். இதில், சால மாமலர் கொண்டு சரணென்று மேலை யார்கள் விரும்புவர் மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று லேமார் கண்ட நின்னையே. (4) என்பது நான்காவது திருப்பாடல். அடுத்த பதிகம் *குருக் தவன் (1.114) என்ற முதற்குறிப்புடையது. இதில், பெண்ணினல் லானையோர் பாகம் வைத்துக் கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன் விண்ணவர் தானவர் முனிவ ரோடு மண்ணவர் வணங்குகன் மாற்பேறே. (6) 8. கச்சித் திருமேற்றளி (பிள்ளை பாளையம்) : காஞ்சி இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1; கல் தொலை விலுள்ளது. பேருந்து நிலையத்தின் அருகிலுள்ளது. இத் திருக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சந்நிதிகள் உள்ளன. ஒன்று திருமாலுருவம். சம்பந்தர் பதிகம் ஒத உருகிச் சிவலிங்கம் ஆகிய ஒதவுருகீசர் சந்நிதி; மற்றொன்று திருமேற்றளி நாதர் சந்நிதி - இச்சந்நிதித் தெருவின் கோயிலில் ஆளுடைய பிள்ளையார் கோயில் உள்ளது. இவர் வருகையால் இப்பகுதி பிள்ளையார் பாளையம் எனப் பெயர் பெற்றது. 9. மாற்பேறு (திருமால்பூர்) : செங்க ல் ப ட் டு . அரக்கோணம் இருப்பூர்தி வழியில் திருமால்பூர் நிலையத்தி விருந்து 3 கல் தொலைவு. திருமால் சக்கராயுதம் வேண்டிச் சிவனை வழிபட்டுப் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/316&oldid=856295" இலிருந்து மீள்விக்கப்பட்டது