பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 297 இவ்விடத்தில் சேக்கிழார் பெருமானின் பூம்பாவை யைப் பற்றிய வருணனை படித்து மகிழத்தக்கது. இவ் வருணனையின் முத்தாய்ப்பாக, எண்ணிலாண் டெய்தும் வேதாப் படைத்தவள் எழிலின் வெள்ளம் கண்ணுங்ான் முகத்தால் கண்டான்; அவளினும் கல்லாள் தன்பால் புண்ணியப் பதினா றாண்டு பேர்பெறும் புகலிவேந்தர் கண்ணுதல் கருணை வெள்ளம் ஆயிர முகத்தார் கண்டார். -(ஞானசம்பந். 1109) என்று காட்டுவார். ஞானக்கன்று பூம்பாவையின் மேனி வனப்பினை நோக்காது சிவபெருமானது திருவருட் பெரு வெள்ளத்தை ஆயிர முகத்தாற் காணுதற்குரியதாகக் கண்டு மகிழ்கின்றார் என்ற கவிஞரின் துட்பம் உணர்ந்து மகிழத்தக்கது. இந்த அற்புதம் நிகழ்ந்த பொழுது பிள்ளையாரின் வயது பதினாறு என்பது அறியக் கிடக் கின்றது. பிள்ளையார் திருக்கடைக் காப்புச் சாத்தி இறைவனைப் பரவுகின்றார். பூம்பாவையைக் கண்ட சிவநேசர் பிள்ளையாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கு கின்றார். பூம்பாவையும் சிவபெருமானைப் பணிந்து ஞானக்கன்றை வணங்கி நிற்கின்றாள், ஞானக்கன்றை வணங்கி நிற்கும் சிவநேசர், அடியேன் பெற்றெடுத்த பூம்பாவையைத் தேவரீர் திருமணம் புரிந்து கொள்ள வேண்டும்' என வேண்டுகின்றார். இதனைச் செவிமடுத்த பிள்ளையார், அன்பீர், நீவிர் பெற்ற பெண் விடத்தால் மரித்த பின்பு யாம் மீண்டும் பிறக்கச் செய்தோம். ஆகவே இவள் எமக்கு மகளா 31. பெ. பு: ஞானசம்பந். 1095 - 1108.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/338&oldid=856344" இலிருந்து மீள்விக்கப்பட்டது