பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

强2 - ஞானசம்பந்தர் வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் கடிகொள் கொன்றைக் கலந்த சென்னியன் கொடிகொள் விழவார் கோலக் காவுளெம் அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே (6) என்பது ஆறாவது பாடல். இந்தப் பதிகத்தைத் தக்க ராகத்தில் கைகொட்டிப் பாடியதைக் கண்ட கோலக்காப் பெருமான் இந்தப் பிஞ்சுக் கை வருந்தும் என்றெண்ணித் திருவைந்தெழுத்து வரையப் பெற்ற பொற்றாளம் இரண்டைப் பிள்ளையார் கையில் வந்து பொருந்தும்படி அருளுகின்றார். அம்பாள் அத்தாளத்திற்கு ஒசை கொடுக்கின்றார். இதனால் இங்குள்ள ஈசன் திருத்தான முடையார் என்றும், அம்பாள் ஒசைகொடுத்த நாயகி என்றும் திருநாமங்களால் வழங்கப்பெறுகின்றனர். சம்பந்தருக்குப் பின்னர் சுமார் நூறு ஆண்டுகள் பின் வந்த நம்பியாரூரருக்கு கோலக்காவில் பிள்ளையார் பொற்றாளம் பெற்ற செய்தி தெரிந்து, இந்த வழியாகப் போனபோது கோலக்கா இறைவனை வணங்கி, காளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பக் தனுக்கு உலகவர்முன் தாளம்ஈக் தவன்பாடலுக் கிரங்குக் தன்மையாளனை என்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாடகின்றாடும் அங்கணன்தனை என்கண மிறைஞ்சும் கோளிலிப் பெருங்கோயி லுளானைக் கோலக்காவினிற் கண்டுகொண் டேனே (7.62:8) (புறவம் - சீகாழி) . எனவரும் திருப்பாடலில் உளமுருகிப் போற்றியுள்ளதைக் கண்டு மகிழ்கின்றோம். இதன் கண் உலகவர் முன் தாளம் ஈந்து எனத் தம்பிரான் தோழர் தெளிவாகக் குறிப்பிடு .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/57&oldid=856491" இலிருந்து மீள்விக்கப்பட்டது