பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 இதனைக் கேட்ட என் மனம் பூரித்தது. விம்மிதம் அடைந்தேன், நல்லார் இணக்கத்தின் உயர்வை என் வாழ்க்கையில் அன்றுதான் உணர்ந்தேன். சுவாமிகளின் உயர்விற்கும் கல்வியாற்றலுக்கும் இதைத் தவிர வேறு என்ன சான்று வேண்டும்? அடுத்த பல தினங்களில் நாகையின் அண்மையில் உள்ள மஞ்சட் கொல்லை என்ற தலத்தில் சுவாமிகளின் சொற்பெருக்கு நிகழ்ந்தது. அப்போது வந்து கேட்டார் அனைவரும் விழித்த கண் இமையாது சுவாமிகளின் மலர் முகத்தையே கண்டு களித்திருந்தனர். சொற்பெருக்கில் நகைச்சுவையும் சமத்துவச் சுவையுமே ததும்பும். சுவாமி களின் வடமொழிப் புலமை வேதாகமங்களினின்றும் கூறிய மேற்கோள்களாலும் விளக்க உரையாலும் விளங்கிற்று. தென்மொழிப் புலமைக்கு அளவு கூற வல்லுநர் யார்? ........... சொற்பெருக்கை இன்னும் பலமுறை கேட் டானந்தித்திருக்க எண்ணியிருந்தேன். சுவாமிகள் தைப்பூச நாளில் இராமலிங்க வள்ளலை நமக்கு நினைவுறுத்தி இறையொளியில் கலந்தார்கள். இனி என் செய்வது! இது இரத்தின தேசிகரின் உரை. அடிகளார் தம்மன அறையிலிருந்து நூல்களைப் புரட்டிப் பார்த்ததாக இரத்தின தேசிகர் கூறியுள்ளார். அங்ங்ன மெனில், அடிகளாரை ஒரு நடமாடும் நூலகம் என்று கூறலாம் அன்றோ? அடுத்து வழக்கறிஞரும் பிற்காலத்தில் சமாசத் தில் பல தொண்டுகள் புரிந்தவரும் மலேயாவில் இந்தியர் சங்கப் பொறுப்பாளராய் இருந்தவரும் ஆகிய கே. இராம நாதன் செட்டியாரின் கட்டுரைச் சுருக்கம் காண்பாம். நான் கண்ட ஞானியார் சுவாமிகள் (கே. இராமநாதன் செட்டியார், பி.ஏ.,பி.எல்.) 'திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் சுவாமிகள் உடல்