பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சைவமும் தமிழும் வளர்த்த சான்றோர்

பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன்.

 தமிழ்நாடு நாகரிகத்தில் நனிசிறந்த நாடு. வழிவழியாக நல்லறங்கள் செழிக்கும் திருநாடு. திருநெறிய தெய்வநெறி தழைத்து வளரும் நிலம். காரைக்கால் அம்மையார், திருமூலர், சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர், தாயுமானவர், ராமலிங்க அடிகள் என வாழையடி வாழை யாகத் தெய்வநெறி வளர்ந்த திருநாடு.
 இருபதாம் நூற்றாண்டில் திருப்பாதிப்புலியூரில் சைவமும் தமிழும் தழைக்க தவத்திரு ஞானியார் அடிகள் செங்கோலோச்சினார்கள். அப்பர் அடிகளை நினைவுறுத் தும் வண்ணம் திருநீறு துதைந்த மேனி. உள்ளம்போல் வெண்ணிறு சண்ணித்த திருமேனி, முதுமையில் பேரழகு, மூதறிவின் தனிப்பொலிவு, ஞானத்தின் திருவுரு என விளக்கம் பெற்றுத் திகழ்ந்தார்கள்.
 மனித குல மேம்பாட்டிற்கும், உயிர்க் குலத்தின் உய் விற்கும் ஞானியார் அடிகள் ஆற்றிய ஞானத் தொண்டு நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தது. கருணை பொழியும் திருமுகம். அருட்கதிரால் மக்களை ஈர்த்தது. அவர்கள் தொட்டது துலங்கும். நான்காவது தமிழ்ச்சங்க மாகிய மதுரைத் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கி வைத்தார்கள். சைவ சித்தாந்த சமாஜமாகிய சைவ சித்தாந்தப் பெருமன்றத்தைத் தொடங்கி வைத்தார்கள். பொன், மணி, முத்து, பவள விழாக்கண்டு வளர்ந்தோங்கி வருகிறது. பெரியார் ஈ.வெ.ராவின் இதழைத் தொடங்கி வைத்தார்கள்.