பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

புரிய வேண்டும் - என்று விரும்பியிருப்பது ஏமாற்றமாய்ப் போயிற்று.

அடுத்து, தமிழணங்கு என்னும் இதழில், ச. நடராசன் (Superintendent, S.A. Co-operative Central Bank Cuddalore)என்பவர் எழுதியுள்ள கட்டுரையின் மிகவும் சுருங்கிய சுருக்கம் வருமாறு:

தமிழணங்கு

நல்லுரசிரியர்

'மறைத்திரு ஞானியாரடிகளின் பெருமையை என்ன வென்று ஆராய்வது இக்கட்டுரையின் கருத்தன்று. யாது பற்றி எனின், அவரது நூலறிவும் நுண்ணுணர்வும் மெய்ஞ் ஞானமும் இன்ன தன்மையன என அளவிட்டறிந்தார் யாவரும் இலர். அங்ங்ன மிருப்ப, ஒன்றுக்கும் பற்றாத எளியேன் போன்றா னொருவன் அவர் பெருமையை ஆராய முயல்வது, அந்தகன் ஒருவன் இயற்கையின் வனப்பை யெல்லாம் ஆராயப் புகுவது போலாம். ஆயின், அவரது புனித வாழ்க்கையி னின்று மக்கள் அனைவரும் கற்றாரும் மற்றாரும் - கற்றுக் கொள்ள வேண்டிய படிப் பினைகள் யாவை என்பதை மட்டும் ஈண்டுக் கருதுவோம்:

ஞானியாரடிகளை நினைத்தவுடன் அவரது மலர்ந்த முகமும் அவர் அகத்திருந்து எழும் இனிய சொல்லும் நம்முன் தோன்றுகின்றன. அடுக்கிய இடுக்கண் கோடி உற்று உள்ளம் வெதும்பி வாழ்க்கையில் மனச் சலிப்பு உற்ற ஒருவனும் அவரது திருமுன் சென்று, அவர் உள்ளத் திருந்து அன்பு பெருக்கெடுத்து ஊறும் கனி மொழியைக் கேட்பானாயின், அவன் நலிவு நீங்கிப் புத்துயிர் பெற்றுத் திரும்புவான் என்பதை அவரோடு ஒரு சிறிது கூடிப்பழகிய எவரும் அறிவர் ..... எல்லா உயிர்கள் மேலும் எவன் கருணை பூண்டு ஒழுகுகின்றானோ அவனே அந்தணன்